• முகப்பு
  • அரசியல்
  • ஜனாதிபதித் தேர்தல்களிலின் போது தமிழ் பேசும் மக்கள் தவறான முடிவுகளையே தொடர்ந்து எடுத்து வந்துள்ளனர்

ஜனாதிபதித் தேர்தல்களிலின் போது தமிழ் பேசும் மக்கள் தவறான முடிவுகளையே தொடர்ந்து எடுத்து வந்துள்ளனர்

ஜே.எம். ஹாபீஸ்

UPDATED: Sep 15, 2024, 3:34:08 AM

 

 கடந்த ஒவ்வொறு ஜனாபதித் தேர்தல்களிலும் இலங்கையின் சிறுபான்மை இன மக்கள் தவறான முடிவுகளையே எடுத்து இன்று வரை பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கி்ன்றனர்.

 எனவே எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என இலங்கை தேசிய ஜனநாயகக் கட்சி வேண்டுகோள் விடுத்தது.

original/img-20240902-wa0045
இலங்கை தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவருமான நாரா அருன்காந் அவர்கள் கண்டியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். கண்டி டெவோன் ஹோட்டலில் இடம் பெற்ற இச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -

1978ம் ஆண்டு அரசியல் அமைப்பு அமுலுக்கு வந்தன் பிறகு இலங்கை மக்கள் பல ஜனாதிபதித் தேர்தல்களை சந்தித்தனர். ஒவ்வொரு ஜனாபதித் தேர்தல்களிலும் தவறான முடிவுகளையே சிறுபான்மை மக்களில் அதிகமாவர்கள் எடுத்தனர். 

ஒரு சந்தர்ப்பத்தில் ரனில் விக்கரம சிங்கவை தோல்வி யடையச் செய்ய வேய்டும் என்ற அடிப்படையில் வாக்களித்தனர். பின்னளர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆன காலத்தில் பொன்சேக்காவுக்கு வாக்களித்தனர். இப்படி பல் வேறு காலக்கட்டங்களிலும் தோல்வி அடைந்த வேட்பாளாகளுக்கே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவு தெரிவித்தனர்.

அதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து அடுத்து வரும் பாராளுமன்றத்தில் அல்லது அமைச்சரவையில் சிறுபான்மை இன பிரதிநிதிகள் கையால் ஆகாதவர்களாக ஆக்கப்பட்டனர். இதனால் பாரிய நட்டத்தை பொதுமக்களே எதிர் கொண்டனர். கடந்த 15 வருட வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இந்நிலை மேலும் உக்கிரமடைந்திருந்த்தை அவதானிக்கலாம். வெற்றி பெறும் ஜனாதிபதி வேட்பாளர் என்பதை விட நாட்டில் பெரும்பான்மையினரின் தெரிவு எது என்பதை புரிந்து அதற்கு ஏற்வகையில் நாமும் எமது தெரிவை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

original/img-20240901-wa0081
இதனால் தொடர்ந்தும் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டனர். இத்தவறை இம் முறை சிறுபான்மை மக்கள் செய்யக் கூடாது. அதாவது நாட்டின் பெரும்பாலான மக்கள் ஆதரிக்கும் ஒருவரை நாமும் ஆதரித்து அவரது வெற்றியில் பங்காளியாகவேண்டும்.

இன்று தேசிய மக்கள் சக்தியையே பெரும்பாலான மக்கள் ஆதரிக்கின்றனர்.

அத்துடன் ஊழலற்ற ஒரு ஆட்சி ஏற்பட வேண்டுமாயின் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டும். கடந்த கால கிளர்ச்சிக்கு (அரகல) முக்கிய காரணமாக இருந்தது ஊழலாகும். ஊழலுக்கு எதிராகவே அதிகமானலர்கள் ஒன்றிணைந்தனர்.

original/img-20240912-wa0169
எனவே நாமும் இன்று அனுரகுமார திசாநாயக்காவை ஆதரித்து அந்த வெற்றியில் பங்காளிகளாக வேண்டும்.தேசிய ஜனநாயகக் கட்சி அங்கத்தவர்கள் மற்றும் அகில இலங்கை இந்து சம்மேளனம் உற்பட பொது மக்களிடம் நாம் மேற்படி வேண்டுகோளை முன் வைக்கிறோம்.  

அது மட்டுமல்ல, நாம் தேசிய மக்கள் சக்தி உயர் பீடங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது அவர்கள் சிறுபான்மை இனத்திற்கு சார்பான பல கருத்துக்ளை முன்வைத்தனர். எனவே  அனுரகுமார திசாநாயக்காவின் கரத்தைப் பலப்படுத்தும் படி இலங்கை தேசிய ஜனநாயகக் கட்சி சிறுபான்மை மக்களை வேண்டுகிறது என்றார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended