திருச்சியில் ஜி.ஜோன் அபாகஸ் பயிற்சி மையம் சார்பில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி
JK
UPDATED: Nov 28, 2024, 8:07:20 AM
திருச்சி
ஜி.ஜோன் அபாகஸ் பயிற்சி மையம் சார்பில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டிகள் திருச்சியில் நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடக, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 500க்கு மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
10நிமிடத்தில் சுமார் 100கடினமான கணித வினாவிற்கு விடையளித்து அசத்தினர். இப் போட்டியில் சிறப்பாக செயல் பட்ட மாணவர்கள் அடுத்த சுற்று போட்டிக்கு தகுதி பெற்றனர்.
தொடர்ந்து 3சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திரைப்பட நடிகர் திருமுருகன் மற்றும் அபாகஸ் பயிற்சி மையத்தின் நிறுவனர் செல்வமணி ஆகியோர் கோப்பைகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.ஜோன் அபாகஸ் பயிற்சி மைய நிறுவனர் செல்வமணி :
National Level Abacus Competition
இது போன்ற போட்டிகள் மாணவர்களிடம் அபாகஸ் ஆர்வத்தை அதிகப்படுத்தும். இன்றைய நவீன உலகில் மொபைல் மற்றும் வீடியோகேம் என்று சிறிய உலகத்திற்குள் முடங்கி உள்ள மாணவர்களை அதில் இருந்து மீட்பதற்கு அபாகஸ் ஒரு வரப்பிரசாதம்.
அபாகஸ் பயிற்சி மாணவர்களுக்கு கணிதத்தின் மீது இருக்கும் தேவையற்ற பயத்தை அகற்றி படிப்பின் மீது ஆர்வத்தை தூண்டுவதாக அமையும் என தெரிவித்தார்.