கழுகுகளைப் பார்த்து நாம் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

TGI

UPDATED: Feb 13, 2024, 5:59:57 PM

கழுகுகள் எழுபது வயது வரை வாழக்கூடியவை. ஆனால் அது அவ்வளவு சுலபமாக அந்த வயதை எட்டி விடுவதில்லை.

சுமார் நாற்பது வயதை தொட்ட உடன் முதுமையின் பிடியில் சிக்கிக் கொள்கின்றன.

இறகுகள் வலுவிழந்து கனமாகி விடுகின்றன.

அலகு வளைந்து போய்விடும். கால் நகங்களும் இடை யூறாக மாறி இரையை பிடிக்க முடியாமல் செய்துவிடும்.

இந்த நிலையில் அந்த கழுகுகள் இக்கட்டான ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றன.

ஒன்று முதுமையின் மாற்றங்களினால் செத்து மடிய வேண்டும் அல்லது ஒரு கடுமையான மாற்றத்திற்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதைத் தேர்ந்தெடுக்கும் கழுகு மலை உச்சிக்கு சென்று பாறையின் மீது மோதி தன் அலகை தானே உடைத்துக் கொள்ளும். நகங்களையும் இறகுகளையும் பிய்த்துவிடும். பிறகு பல மாதங்கள் உணவின்றி தவம் போல் புதிய இறகுகளும் புதிய அலகும், நகங்களும் முளைக்கும் வரை காத்துக் கொண்டிருக்கும் .

பிறகு அதனால் 30 ஆண்டுகள் வரை தொடர்ந்து வாழ முடியும் .

கழுகுகள் போலத் தான் நாமும் ஒரு இலக்கை அடைய வேண்டுமென்றால் அதற்கு இடையூறாக இருக்கும் நம் தீய எண்ணங்கள், தீய பழக்கங்களைப் பிய்த்து எரிந்துவிட்டு நல்லவைகளோடு நம்மை நாமே புதுப்பித்துக் கொண்டு முன்னேற வேண்டும்.

  • 13

VIDEOS

RELATED NEWS

Recommended