• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பல கோடி மதிப்புள்ள மாநகராட்சி இடத்தை வாங்கி விட்டதாக பஞ்சாயத்தில் காவல்துறையில் கூறிய வினோதனம்

பல கோடி மதிப்புள்ள மாநகராட்சி இடத்தை வாங்கி விட்டதாக பஞ்சாயத்தில் காவல்துறையில் கூறிய வினோதனம்

மாரிமுத்து

UPDATED: Sep 27, 2023, 2:14:25 PM

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான இடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அடுத்து 12 அடி அகலத்தில் ஆயிரம் அடி நீளத்துக்கு மேல் பல கோடி மதிப்புள்ள இடம் சுமார் 40 நபர்கள் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது அதுபோல மாநகராட்சி அதிகாரிகளிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று வரை ஆக்கிரமிப்பு அகற்ற மாநகராட்சி நிர்வாகத்திற்கு மனம் இல்லாமல் முன் வரவில்லை இந்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபருக்கு அருகில் உள்ள வீட்டுக்காரருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் இரு தரப்பும் புகார் அளிக்கப்பட்டுள்ளது அப்போது காவல்துறையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இரண்டு நபர்கள் அந்த இடத்தை நாங்கள் விலைக்கு வாங்கி விட்டோம் அந்த இடத்தை நாங்கள் பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று காவல்துறையில் கூறியுள்ளனர்.

மாநகராட்சி இடத்தை விலைக்கு வாங்கி விட்டதாக காவல்துறை விசாரணையில் இரண்டு பெரிய நபர்கள் பண பலம் வசதி பலம் படைத்தவர்கள் காவல் துறையில் கூறியது வியப்பாக உள்ளது.

மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களுக்கு எப்போது விற்பனை செய்யப்பட்டது என்ற விபரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படுத்த வேண்டும். 

பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை கட்டிடங்கள் கட்டிய ஆக்கிரமிப்பு செய்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்ற ஏன் முன்வரவில்லை என்பதும் வியப்பாகவே உள்ளது.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றினால் சண்முகபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த வழியாக வி இ மெயின் ரோட்டிற்கு வந்துவிடலாம், அதுபோல பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் செல்லும் சூழ்நிலை உருவாகும்.

இனிமேலாவது மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அந்த ஆக்கிரமிப்பு அகற்ற முன்வர வேண்டும் என்பதுதான் அப்பகுதி மக்களின் கோரிக்கையாகவே உள்ளது

VIDEOS

RELATED NEWS

Recommended