தமிழகத்தின் "சமநீதி கொள்கை"யை கைவிடக்கூடாது
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Feb 4, 2024, 6:41:13 AM
புதுக்கட்சி அரசியல் என்பது ராஜபாட்டை அல்ல. ஆகவே துணிச்சலுடன் தம்பி விஜய் ஆரம்பித்திருக்கும் இந்த அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தமிழகத்தின், சமநீதி கொள்கையை, தமிழக வெற்றி கழகமும் கைவிடாமல் முன்னெடுக்க வேண்டும் என்பதுவே எங்கள் எதிர்பார்ப்பு என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்தார்.
இந்திய பொருளாதார வளர்ச்சியில், தமிழ்நாடு, ஏறக்குறைய 15% GDP வளர்ச்சி, 8% பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் மாநிலம். தமிழ்நாட்டு மாநில அரசியலுக்கு அப்பால் தமிழ் மாநிலம் வளர்ந்துள்ளது. அதன் காரணம் அங்கு நிலவும் சமநீதி சமுதாய கொள்கை, கல்வி வளர்ச்சி, கடும் முயற்சியாளர்கள் சார்ந்த தனியார் துறை பொருளாதாரம். அதுனாலே தமிழகம் இன்று இந்தியாவின் அதிக நகரமயமாக்களை கண்ட மாநிலம் (Most Urbanized State) ஆகியுள்ளது.
ஆகவே சமநீதி கொள்கையை, தமிழக வெற்றி கழக தம்பிகள் கைவிடகூடாது என்பது எங்கள் எதிர்பார்ப்பு என்றும் கூறியுள்ளார்.