திமுகவும், பாஜகவும் கூட்டணி பலத்தை நம்பி நிற்கிறது. அதிமுக ஒன்றுதான் மக்களை நம்பி நிற்கிறது - ராஜேந்திர பாலாஜி.
அந்தோணி ராஜ்
UPDATED: Mar 15, 2024, 9:53:58 AM
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
Also Read : கடையில் ஒரு வார காலமாக அச்சுறுத்தி வந்த கொடிய விஷ முள்ள 6 அடி கருஞ்சாரை பாம்பு.
எடப்பாடி பழனிச்சாமி கரத்தை வலுப்படுத்த வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
சில தொலைக்காட்சிகளில் கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பை செய்கிறார்கள்.
Also Read : உலக அளவில் விபச்சார உலகின் முடி சூடா ராணியாக இருப்பவருக்கும் ஆய்வாளர்க்கும் என்ன சம்பந்தம் ?
தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக நிற்க வேண்டும் என ஒரு சட்டம் போட்டால் அதிமுக மட்டும் தான் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறும்.பல கட்சிகள் காணாமல் போய்விடும்.
திமுகவிற்கு ஓட்டு வங்கி கிடையாது. திமுக கூட்டணி பலத்தை நம்பி நிற்கிறது. பாஜகவும் கூட்டணி பலத்தை நம்பி நிற்கிறது. அதிமுக ஒன்றுதான் மக்களை நம்பி நிற்கிறது.
Also Read : வங்கியின் மேற்கூரை விழுந்து மூன்று பேருக்கு பலத்த காயம்.
கூட்டணி வருமா வராதா என்பதை நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. அதை எடப்பாடி பழனிச்சாமி பார்த்துக் கொள்வார்.
ஒரு கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் எனக் கூறி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவினர் 50 லட்சம் கையெழுத்து வாங்கி வீட்டில் வைத்துள்ளனர் .மீண்டும் மீண்டும் திமுக வினர் பொய் சொல்லுகின்றனர் என தெரிவித்தார்.