கடையில் ஒரு வார காலமாக அச்சுறுத்தி வந்த கொடிய விஷ முள்ள 6 அடி கருஞ்சாரை பாம்பு.

செந்தில் முருகன்

UPDATED: Mar 14, 2024, 7:10:21 PM

மயிலாடுதுறை பட்டமங்கல தெரு கடை வீதியில் உள்ள நாட்டு மருந்து கடை ஒன்றில் ஒரு வார காலமாக பாம்பு ஒன்று அச்சுறுத்தி வந்துள்ளது.

இதனை அறிந்த கடை உரிமையாளர் சீதாளம்பாள் அச்சத்துடன் சீர்காழி சேர்ந்த பாம்பு பிடி வீரரான பாம்பு பாண்டியன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.

Also Read : கனிமொழியை எதிர்த்து சரத்குமார் போட்டியா ?

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பாண்டியன் மற்றும் கடை ஊழியர்கள் இரண்டு பேரின் உதவியுடன் சேர்ந்து கடையில் உள்ள பொருட்கள் அனைத்தையும் வெளியில் எடுத்து வைத்தனர். தொடர்ந்து பாம்பு பாண்டியன் பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டார்.

Also Read : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி.

கடையின் உள்ளே பொருட்கள் வைத்திருக்கும் பலகைக்கு அடியில் பாம்பின் வால் பகுதி தெரிந்ததை கண்ட பாம்பு பாண்டியன் அந்தப் பாம்பை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு லாவகமாக பிடித்தார்.

Also Read : 5 ஆண்டுகளில்ல் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை.

பிடிபட்ட பாம்பு சுமார் 6 அடி நீளமுள்ள கொடிய விஷமுள்ள கருஞ்சாரை பாம்பு என தெரியவந்தது.

இதனை அடுத்து அந்த பாம்பை பிளாஸ்டிக் குடுவையில் அடைத்த பாம்பு பாண்டியன் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டார். 

Also Read : குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை.

ஒரு வாரமாக பாம்பை கண்டு அச்சத்துடனே இருந்த கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பாம்பு பிடிபட்டதையடுத்து மகிழ்ச்சியுடன் பெருமூச்சு விட்டனர்.

Also Read : ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended