ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக சிவில் அமைப்புகள், ஊடகவியலாளர்கள் மற்றும் இளம் சமூகத்தினருக்கு அறிவூட்டும் கருத்தரங்கு
எம். எப். எம். நசார்
UPDATED: Feb 21, 2024, 4:05:47 PM
ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக சிவில் அமைப்புகள், ஊடகவியலாளர்கள் மற்றும் இளம் சமூகத்தினருக்கு அறிவூட்டும் கருத்தரங்கு இன்று (21) பிற்பகல் நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி தொழிற்சங்க உறவுகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கில் பிரதி IP சட்டத்தரணி ருவன் குணசேகர, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஆலோசகர் மற்றும் இலங்கை கணினி மறுமொழி மன்றம், முன்னாள் பணிப்பாளர் பொறியியலாளர் புலஸ்தி வனியாராச்சி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப சிரேஷ்ட விரிவுரையாளர் புலஸ்தி குணவர்தன ஆகியோர் இங்கு உரையாற்றினர்.
பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டின் விளைவுகள், சட்டத்தின் நே
ர்மறையான பண்புகள், சட்டத்தின் கீழ் தவறுகள் மற்றும் அதற்கான தண்டனைகள், தகவல் தொடர்பு தொடர்பான சேவை வழங்குநர்களின் பொறுப்பு, போலி ஆன்லைன் அமைப்பின் நடத்தை ஆகியவை பற்றி இங்கு விவாதிக்கப்பட்டது.