• முகப்பு
  • இலங்கை
  • கொழும்பு முஸ்லிம் மகளிர் தேசிய கல்லுாாியின் விற்பனை கண்ககாட்சி

கொழும்பு முஸ்லிம் மகளிர் தேசிய கல்லுாாியின் விற்பனை கண்ககாட்சி

அஷ்ரப் ஏ சமத்

UPDATED: Feb 24, 2024, 5:39:22 PM

கொழும்பு முஸ்லிம் மகளிர் தேசிய கல்லுாாி இன்று சனிக்கிழமை 24 ஆம் திகதி பழைய மாணவிகள் இணைந்து பாடசாலையின் கட்டிட நிதிக்காக ரமலான் முன் விற்பனை சந்தை ஒன்றினை கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மத்திய நிலையத்தில் நடாத்தினார்கள்.

இந் நிகழ்வுக்கு கல்லுாாி அதிபர் பாத்திமா நஸ்ரியா முனாஸ் மற்றும் பழைய மாணவிகள் சங்கத்தின் உப தலைவி பெரோஸா முசம்மில் ஆகியோர்கள் தலைமையில் ரமலான் முன் விற்பனை சந்தைகள் பாடசாலை மாணவிகளது உற்பத்திகள் கண்காட்சிகள் விற்பனைச் சந்தைக்கு விடப்பட்டன.

Also Read.நாட்டின் ஒன்றுபட்ட முன்மொழிவு ஜனாதிபதிகிடம் கையளிப்பு

 இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பைசல் செர்மிக் முகாமைத்துவ பணிப்பாளர் பைசால் மற்றும் டைமன்ட் நிறுவனத்தின் விற்பனை முகாமைத்துவ முகாமையாளர் சேர்த்திக்காவும் அதிதிகளாக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தனர்.

அத்துடன் பிரதம அதிதி அவர்கள் இக் கல்லுாரியின் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ள நிர்மாணத்திற்கு நிதி அன்பளிப்பினை வழங்கி வைத்தார்

Also Read.2400 கிலோ எடையுடன் தேயிலை தூள்கள் கைப்பற்றப்பட்டன

அத்துடன் கல்லுாி அதிபர் இங்கு தகவல் தருகையில் 

கொழும்பில் மிகவும் பிரபல்யம் பெற்ற இப் தேசிய பாடசாலையான முஸ்லிம் மகளிர் கல்லுாாிக்கு 3500க்கும் அதிகமான மாணவிகள் கல்வி கற்றுவருகின்றனர்.

 அவர்களை உள்ளடக்குவதற்கு போதிய பௌதீக வளங்கள் போதாமையாக உள்ளது. அதற்காக 1000 மில்லியன் ருபா செலவில் பல தேவைகள் கட்டிடமொன்றை நிர்மாணிபபதற்கு பழைய மாணவிகள் கல்லுாரி பிிவருத்திச் சங்கங்கள் நலன் விரும்பிகள் திட்டமிட்டு வரைபடங்களை வரைந்து கல்வியமைச்சின் அனுமதியையும் பெற்றுள்ளனர்.

Also Read.கல்பிட்டி ஐயூப் பாடசாலையில் கால் கோள் விழா

இதற்காக நிதிகளை தனவந்தர்கள் பழைய மாணவிகள் கட்டிட நிதிக்காக நிதி திரட்டி வருகின்றோம் எனத் தெரிவித்தார் இக் கட்டிடத்திற்காக பழைய மாணவிகள் 10 ஆயிரம் ருபா பெருமதியான டிக்கட்டினைப் பெற்று தமது அன்பளிப்பினை செய்ய முடியும் எனவும் கல்லுாாி அதிபர் அங்கு தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended