• முகப்பு
  • இலங்கை
  • 2400 கிலோ எடையுடன் தேயிலை தூள் மூடைகள் லொரியுடன் தோட்ட மக்கள் முற்றுகை

2400 கிலோ எடையுடன் தேயிலை தூள் மூடைகள் லொரியுடன் தோட்ட மக்கள் முற்றுகை

கௌசல்யா

UPDATED: Feb 24, 2024, 11:08:06 AM

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கிளாயர் ஸ்டேர்லின் தோட்டப் பிரிவில் 2400 கிலோ எடையுடன் தேயிலை தூள் மூடைகள் லொரியுடன் தோட்ட மக்கள் முற்றுகை இட்டுள்ளனர்.

தோட்ட உதவி முகாமையாளர் வீட்டை நோக்கி வந்த லொறியே தோட்ட மக்களால் பிடிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் 119 க்கு அழைப்பை ஏற்படுத்தி முறைபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று தோட்ட மக்கள் வேலைக்கு செல்லாது பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து ஸ்தலத்திற்கு வருகை தந்த போலீசார் சம்பந்தப்பட்ட வாகனத்தையும் தேயிலைத் தூளையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல பணித்தனர் சம்பவம் தொடர்பாக தோட்டத் தொழிலாளர்கள் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் பட்சத்தில் மாத்திரமே அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்தனர். 

அதேபோல் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த போதிலும் தமக்கு இவ்விடயம் தொடர்பில் தோட்டமக்கள் எந்த விதமான முறைப்பாடுகளையும் அளிக்கவில்லை என்றும் திருட்டுத்தனமான தேயிலை தூள் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முகாமையாளர் தெரிவித்தார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended