பல நாள் மீன்பிடி கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Jan 31, 2024, 2:39:31 AM
தற்போது கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் ஏறக்குறைய ஐந்நூறு பல நாள் மீன்பிடி படகுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அகில இலங்கை பல நாள் கப்பல் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது.
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட லொரென்சோ சன்-4 பல நாள் மீன்பிடிக் கப்பலையும், மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டமைக்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் சங்கம் கூறுகிறது.
அகில இலங்கை பல நாள் படகு உரிமையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (30ஆம் திகதி) சிலாபத்தில் இடம் பெற்றதுடன் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சங்கத்தின் செயலாளர் ருவன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்ததாவது:
பல நாள் கப்பல் மீன்பிடி வரலாற்றில் இதுபோன்ற விபத்து நடப்பது இதுவே முதல் முறை. இதுபோன்ற சம்பவத்தை அரசு எதிர்கொள்வது இதுவே முதல் முறை எனலாம்.
சோமாலிய கொள்ளையர்கள் மீனவர்களை அழைத்துச் சென்று பலவிதமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிய செய்திகளை நாம் கேட்கவும் பார்க்கவும் கிடைத்தது. கடற்றொழில் அமைச்சு, கடற்படை மற்றும் அரசாங்கம் மற்றும் சீஷெல்ஸ் மாநிலம் உட்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” தங்களை பாதுகாப்பாக மீட்டமைக்கு என்றார்.
வென்னப்புவ பல நாள் மீன்பிடி கப்பல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் நிமல் ரஞ்சன், லொரென்சோ சோன் - 4 மீன்பிடி கப்பலின் உரிமையாளர் மில்ரோய் பெரேரா ஆகியோரும் இதன்போது உரையாற்றினர்.