ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நாகவேடு கிராமத்தில் பா.ம.க ஆர்ப்பாட்டம்.

பரணி

UPDATED: Feb 27, 2024, 9:42:08 AM

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நாகவேடு கிராமத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுகிறது.

இதனால் பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

Also Read : மவ்லானா ஆசாத் கல்விச் சங்கத்தை கலைக்கும் ஒன்றிய பாஜக அரசின் முடிவு, சிறுபான்மையினர் மீதான வெறுப்பரசியலின் வெளிப்பாடு.

அதிலும் குறிப்பாக தொடர்மின்வெட்டால் பசும்பால் கெட்டுப்போகிறது இதனால் குறிப்பாக விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

மேலும் நஷ்டத்திற்குஆளாக வேண்டியநிலை ஏற்படுகிறது என்று நாகவேடு மின்வாரிய அலுவலகம் முன்பாக இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பா.ம.க செயலாளர் சரவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Also Read : எடப்பாடி மக்களுக்காக இதை செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்தால் அதை செய்கின்ற முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் - ராஜேந்திர பாலாஜி

இதில் நெமிலி ஒன்றிய குழு துணைதலைவர் தீனதயாளன், ஒன்றிய செயலாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் ஆண்கள் ,பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வேனில்தலா 40 லிட்டர்அளவு கொண்ட 30 கேன்களில் கொண்டு வந்த 1200லிட்டர் பாலை கீழே ஊற்றி இவ்வளவு பால்  வீணாகிப் போனது என்று மன வேதனையுடன் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Also Read : தொழிற்சாலை நிர்வாகம் கொடுத்த பொய்யான புகாரில் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கைதா ?

அதைத்தொடர்ந்து நாகவேடுமின்வாரிய அதிகாரியுடன் பாமகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சு வார்த்தையின் போது மின்வெட்டு இல்லாமல் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended