• முகப்பு
  • அரசியல்
  • இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் மற்றும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் மற்றும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் சந்திப்பு

அஷ்ரப் ஏ சமத்

UPDATED: Mar 21, 2024, 12:04:56 AM

இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் மியுகோஷி ஹிடெகி (Mizukoshi Hideaki)க்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவு க்கும் இடையிலான சந்திப்பு   ம.வி.முவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

Also Read : மாவனல்லை பதுரியா மத்தியக் கல்லூரியின் வரலாற்று நூல்

இச்சந்திப்பின்போது ஜப்பான் தூதரகத்தின் பதில் பிரதானி  Katsuki Kotaro மற்றும் இரண்டாம்நிலை செயலாளர் திருமதி. Imai Kaori அவர்களும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்  விஜித ஹேரத்தும் இணைந்துகொண்டிருந்தனர்.

Also Read : HNDE ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பரிந்துரை

 இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து இருதரப்பும் விரிவாக கலந்துரையாடியதுடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

 சர்வதேச நாணய நிதியத்தின் இடையீடுகள் பற்றிய தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு குறித்தும் ஜப்பானின் இராஜதந்திர பிரதிநிதிகளிடம் தெளிவுப்படுத்தப்பட்டதுடன், எதிர்காலத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஜப்பான் தயாராகவுள்ளதாகவும் இதன்போது ஜப்பான் பிரதிநிதிகள் எ டுத்துரைக்கப்பட்டது.

Also Read : தென் கிழக்கு பல்கலைக்கழக 16 வது பட்டமளிப்பு விழா

இந்த சந்திப்பு தொடர்பில் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரா குமார திசாநாயக்க எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றையும் இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended