• முகப்பு
  • அரசியல்
  • மீஞ்சூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி திமுக சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

மீஞ்சூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி திமுக சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

L.குமார்

UPDATED: May 29, 2023, 5:34:22 AM

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பாலைவனத்தில் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி தெருமுனை பிரச்சார கூட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட பிரதிநிதி திருப்பாலைவனம் ராஜா,மீஞ்சூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிலம்பரசன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருபாலைவனம் அன்பு ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முரளிதரன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் முகம்மது அலவி, மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன், மீஞ்சூர் ஒன்றிய குழுப் பெருந்தலைவர் ஜி.ரவி,பொன்னேரி நகர் மன்றத் தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணை செயலாளர் கோளூர் கதிரவன், தலைமை கழக பேச்சாளர் ஆவடி.சி. பாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

கூட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக திமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விளக்கம் அளிக்கப்பட்டது.

திமுக நிர்வாகிகள்  மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended