- முகப்பு
- மருத்துவம்
- முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
மாரியப்பன்
UPDATED: Jan 24, 2024, 6:31:17 AM
பெரம்பலூர் அருகே, சிறுவாச்சூர் பகுதியில் இயங்கி வரும்தனலட்சுமி சீனிவாசன் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
மருத்துவக் கல்லூரியின், நிறுவனர் சீனிவாசன் மற்றும் நிர்வாக இயக்குனர் நீவாணி கதிரவன் தலைமையில்ஜனவரி 23ம் தேதி நடைபெற்றது.
மருத்துவர் ராஜேஷ் செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது மருத்துவக் கல்லூரியில் இதுவரை 84 ஆண்கள் 23 பெண்கள் என 107 நபருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் மேலும், கிட்னி மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்தும், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் மூலம் கிட்னி தானம் பெறப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தவர்.
பெண்கள் அதிகப்படியாக தங்களது உறவினர்களுக்கு கிட்னி தானமாக வழங்கியுள்ளனர் மேலும்17 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்,
கிட்னி தானமாக கொடுப்பதால் எந்த ஒரு பிரச்சனையும் வராது நடைமுறை மனிதர்கள் போலவே கிட்னி தானம் கொடுத்தவர்களும் வாழலாம், எனவே கிட்னி தானம் குறித்த எந்த ஒரு அச்சமும் இன்றி, தேவைப்படும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், அவரது விருப்பப்படி கிட்னி தானம் செய்யலாம் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது,
மேலும் இந்த மருத்துவ கல்லூரியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்க்கு டயாலிசிஸ் என்ற ரத்த சுத்திகரிப்பு செய்யப்படுகின்றன,
இதில் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் அறியலூர், கடலூர், அரியலூர் , கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரத்த சுத்திகரிப்பு செய்து கொண்டு, கிட்னி மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளனர்.
இதில் 86 சதவீதம் பேருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு மிகக் குறைவான தொகையிலேயே சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது இதுவரை 107 கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினருக்கு பாராட்டும் விதமாக கல்லூரி நிறுவனர் சீனிவாசன் கேடயங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு, தங்களது அனுபவங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
பேட்டி: ராஜேஸ் - சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்