• முகப்பு
  • tamilnadu
  • பெண்களுக்கு சம உரிமையை இந்த அரசு கொடுக்கிறதா? குடும்பத் தலைவராக குடும்ப அட்டையில் மாற்றி பாருங்கள் உண்மை தெரியும்.

பெண்களுக்கு சம உரிமையை இந்த அரசு கொடுக்கிறதா? குடும்பத் தலைவராக குடும்ப அட்டையில் மாற்றி பாருங்கள் உண்மை தெரியும்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு எத்தனை முறை விண்ணப்பித்தாலும் பயனில்லை. அவை வெறும் கண் துடைப்பே. பெண்களுக்கு முன்னுரிமை தரும் ஆட்சி திமுக. இந்த ஆட்சியில் பெண்களை குடும்பத் தலைவியாக குடும்பத் தலைவராக பெண்களை அங்கிகரிக்க மக்களே முயன்றாலும் அரசு அதிகாரிகள் அங்கிகரிப்பதில்லை. அப்போ சொத்தில் சம உரிமை என்பது அடுத்தவன் தலையில் மிளகாய் அரைப்பதால் சட்டமாக்கினார்கள். அதே போல குடும்ப கார்டில் மாற்ற சட்டம் ஏன் கொண்டுவர வில்லை. கீழே உள்ள குறுந்தகவலைப் பாருங்கள். குடும்பத்தலைவியாக பெண்ணை மாற்ற மறுத்து நிராகரிக்கப்பட்ட கோரிக்கைக்கான பதில் தகவல். ****************************** உங்களுடைய கோரிக்கை குடும்பத் தலைவர் உறுப்பினர் மாற்றம் பெறப்பட்டது. மேலும் விவரங்களுக்கு 01220518627468 என்ற எண்ணை பயன்படுத்தவும். - TNEPDS இதற்கான தீர்வு... உங்களுடைய கோரிக்கை குடும்பத் தலைவர் உறுப்பினர் மாற்றம் நிராகரிக்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு 01220518627468 என்ற எண்ணை பயன்படுத்தவும். - TNEPDS பெண்களை குடும்பத்தலைவராக மாற்றினால் நாட்டுக்கு என்ன நட்டம்? பெண்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? இதற்கு ஒரு துறை தேவையா? நிதி பற்றாக்குறை என கூறும் அரசு இது போன்ற துறையை மூடினால் நிதி மிச்சமாகும். அதில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யலாமே என மக்கள் கூறுகின்றனர். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended