- முகப்பு
- விளையாட்டு
- நுழைவு சீட்டு பெற தம்புள்ளை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட கிரிக்கெட் பிரியர்கள்
நுழைவு சீட்டு பெற தம்புள்ளை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட கிரிக்கெட் பிரியர்கள்
கல்பிட்டி - அரபாத் பஹர்தீன்
UPDATED: Feb 19, 2024, 11:37:50 AM
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ரி20 போட்டி இன்று இடம்பெறவுள்ள நலையில் அப்போட்டிக்கான டிக்கெட்டினைப் பெற்றுக் கொள்ள தம்புள்ளை பிரதேச செயலகத்தின் கதவுகளை உடைத்து ரசிகர்கள் டிக்கெட் பெற்றுக் கொள்ள முயற்சி. அப்பகுதிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இத் தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் முடிவுற்றிருக்க அதில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று இடம்பெறவுள்ள 2ஆவது மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள 3ஆவது போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் டிக்கெட்டுக்களைப் பெறுவதற்காக ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் தம்புள்ளை பிரதேச செயலகத்தின் முன் கூடியிருந்தனர். இதன்போது டிக்கெட்டுக்களைப் பெற முந்தியடித்த ரசிகர்கள் தம்புள்ளை பிரதேச செயலக பிரதான கதவினை உடைத்து உள்ளே நுழைந்தனர். இதன்போது சிலருக்கு காயங்கள் ஏற்பட்டிருக்காலம் என கூறப்படுகின்றது. பின்னர் விசேட அதிரடிப்படையின் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பில் ரசிகர்கள் குறிப்பிடுகையில் கிரிக்கெட்டின் மீதும் இலங்கை நாட்டின் மீதும் எள்ள ஆசையாலும் ஆர்வத்தினாலுமே எவ்வாறாயினும் டிக்கெட்டுக்களைப் பெற்று இலங்கையின் வெற்றியை நேரடியாகக் காண வேண்டும் என்ற ஆசையிலேயே இவ்விடத்திற்கு வந்தோம் எனக் குறிப்பிட்டனர்.