• முகப்பு
  • இலங்கை
  • சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் குற்றவாளிக்கு 07 வருட கடூழிய சிறை தண்டனை

சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் குற்றவாளிக்கு 07 வருட கடூழிய சிறை தண்டனை

கௌசல்யா

UPDATED: Feb 29, 2024, 7:20:20 AM

வலப்பனை -மத்துரட்ட பொலிஸ் பிரதேசத்தில் 14 வயது சிறுவன் ஒருவரை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு நுவரெலியா மேல் நீதி மன்றம் 07 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

Also Read. எழில் மிகு நாடு இலங்கை

HCR/05/2017 இலக்கம் கொண்ட இந்த வழக்கு 2017 ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களாக நுவரெலியா மேல் நிதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

 இந்த நிலையில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட வலப்பனை- மத்துரட்ட பிரதேசத்தை சேர்ந்த மந்திலக்க திஸாநாயக்க 14 வயது சிறுவன் ஒருவரை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Also Read.சமூக ஆர்வலர் அமீரினால் மஸ்ஜிதுல் ஜென்னா பள்ளிவாசலுக்கு ஒரு தொகை சீமந்து அன்பளிப்பு

இந்த வழக்கின் தீர்ப்பை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய (27) மாலை வழங்கினார்.இதன்போது குற்றவாளியாக இனங்கானப்பட்ட நபருக்கு எதிரான மூன்று வழக்குகளும் ஏழு வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 04 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் இந்த தொகையை வழங்காத பட்சத்தில் மேலும் மூன்று வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினார்.

Also Read.Upi பணப்பரி மாற்ற முறை சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்

அதேநேரத்தில் தீதிமன்ற தண்டனை பணமாக 15 ஆயிரம் வழங்க வேண்டுமென அறிவித்த நீதிபதி இத் தொகையை செலுத்தாத பட்சத்தில் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

VIDEOS

RELATED NEWS

Recommended