ஆலங்கேனி அருள்மிகு விநாயகர் கோவில் பூங்காவனத் திருவிழா

திருகோணமலை

UPDATED: Feb 27, 2024, 11:49:41 AM

திருக்கோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயளாலர் பிரிவில் அமைந்துள்ள ஆலங்கேனி அருள்மிகு விநாயகர் கோவில் பூங்காவனத் திருவிழா  நடைபெற்றது.

இக் கோவில் திருவிழாவை ஒட்டி கிண்ணியா பிரதேசத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் பயிலும்
 மாணவரிடையே பேச்சு, கவிதை, கட்டுறை, நாடகம், நடனம் முதலிய போட்டிகள் நடத்தப்பட்டன.

Also Read.சென்னை மாநகர மேயர் பிரியாவின் கார் விபத்து

 இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் இதன் போது நடைபெற்றது.

இதில் திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர்  சண்முகம் குகதாசன்  தலைமை விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகளை வழங்கி வைத்தார்.

 அத்தோடு மேற்படி திருவிழாவை சிறப்பான முறையில் நடத்திய சைவக் குருமாரையும் கௌரவித்தார்.

Read also.QUAD வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் சீனாவை வரவேற்கவில்லை

கவிஞர் கௌரிராஜன் தலைமையில் இவ்விழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended