• முகப்பு
  • இந்தியா
  • QUAD வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் சீனாவை வரவேற்கவில்லை இந்தியாவில் சாணக்கியன்

QUAD வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் சீனாவை வரவேற்கவில்லை இந்தியாவில் சாணக்கியன்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Feb 25, 2024, 5:21:20 PM

இந்தியாவின் வெளி விவகார அமைச்சகம் Ministry of External Affairs India வினுடைய அழைப்பில் டெல்லியில் நடைபெற்ற Raisina 2024 Dialogue 9 வது மாநாட்டிலே விசேட அழைப்பின் பெயரில் கலந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் கலந்து கொண்டார்.

Also Read. இலங்கையின் இசைக்குயில் கில்மிசாவுக்கு வவுனியாவில் வழங்கப்பட்ட மாபெரும் வரவேற்பு

 விழாவினுடைய பிரதம அதிதியாக பாரத நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். QUAD அமைப்பில் உள்ள அங்கத்துவ நாடுகளான அமெரிக்கா , இந்தியா, அவுஸ்ரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து இந்து சமுத்திரத்தினுடைய பாதுகாப்பினைப் பற்றியும், அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நடாத்திய கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றினார்.

QUAD அமைப்பிலுள்ள 4 நாடுகளும் மேற்கொள்ளும் பணியை எவ்வாறு மேம்படுத்த முடியும்? எனவும், மேலும் அங்கத்தவர்களை எவ்வாறு இணைத்துக் கொள்ள முடியும்? என்பது பற்றியும் பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

Also Read.தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம் வழங்க பரிந்துரை

அந்த வேளையில்  உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி ; ஏனைய நாடுகள் QUAD உடன் இணைந்து பணிகளை மேற்கொண்டாலும் அந்த அந்த நாடுகளை குறிப்பிடத்தக்களவு கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.

ஏனைய நாடுகள் QUAD உடன் இணைந்து பணிகளை மேற்கொண்டாலும் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பிற்கு பாதகமான விடயங்களை மேற்கொள்கின்றனர்.

உதாரணமாக இலங்கையில் 2010ல் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம், 2015 ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அமைக்கப்பட்ட Port City போன்றவற்றை கூறலாம்.

ஆகவே புதிய நாடுகளை இணைத்துக் கொள்வதனை விட தற்போது செயற்படும் நாடுகளின் பலதரப்புக்களை அதாவது உதாரணமாக வடக்கு கிழக்கு தமிழ்த்தரப்பு. இலங்கையின் கடற்பரப்பில் 2/3 பங்கு வடக்கு கிழக்கிலேயே காணப்படுகின்றது.இது தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களாக காணப்படுகின்றன.

Also Read.பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் பாராளுமன்றிற்கு அறிவிப்பு

இந்த பிரதேசங்களில் “சீனாவை வரவேற்பதில்லை” என்றே கூறியுள்ளோம். மூலோபாய இடங்களான Strategic Locations திருகோணமலை போன்ற இடங்களை இன்னும் பாதுகாப்பிற்கு உட்படுத்தாமைக்கான காரணம் அந்த பிரதேசங்களில் இருக்கும் எங்களைப் போன்ற அரசியல் பிரதிநிதிகளே. மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் இலங்கையில் ஒரு சிவில் சேவகராக இருந்தமையின் காரணத்தினாலும் அவருடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தோம்.

அவரும் இக் கூட்டத்துக்கு தலைமை தங்கியிருந்தார். QUAD நாடுகளும் எங்களைப் பலப்படுத்த வேண்டும். எங்களுடன் இணைந்து பணி மேற்கொள்வதை அதிகரிக்கும் போதே அது QUAD நாடுகளினுடைய வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.

QUAD மேற்கொள்ளும் பணிகளைப் பற்றி இலங்கையில் உள்ள மக்களுக்கு விளக்கம் இல்லை. சீனாவினுடைய கடனில் சிக்கியுள்ளது இலங்கை. இலங்கை மக்களுக்கு சீனாவினுடைய முதலீடு எவ்வளவு பாதகமாக இருந்துள்ளது என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.

Also Read.உறவினர் பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டதாக மூதாட்டி புகார்

 இல்லையெனில் சீனா இலங்கைக்கு உதவி செய்கிறது என எம் மக்கள் நினைப்பார்கள். ஆகவே இலங்கையில் வெவ்வேறுபட்ட பணிகளை மேற்கொள்வதற்கு QUAD நாடுகள் முன்வர வேண்டும். வடக்கு கிழக்கில் நாம் சீனா உள்நுழைவதை தடுத்து வைத்துள்ளோம்.

இந்து சமுத்திரத்தில் வாழும் மக்களும் இலங்கையை நல்ல உதாரணமாக எடுக்க வேண்டும். இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி வந்த வேளையில் QUAD நாடாக இருக்கக் கூடிய இந்தியாவே 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கி உதவியது என்பதனையும் சுட்டிக் காட்டினார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended