உறவினர் பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டதாக மூதாட்டி கண்ணீருடன் புகார்.
ராஜ்குமார்
UPDATED: Feb 19, 2024, 11:25:43 AM
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர் 5 லட்சம் பணத்தை கடனாக வாங்கி திரும்பி தராமல் ஏமாற்றியதாகவும் மூதாட்டியை ஆபாசமாக பேசி தாக்கியதாகவும் ராஜேஸ்வரி என்ற மூதாட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
Also Read : அண்ணாமலை என்கின்ற ஆடு வெட்டப்பட்டு 2024 இந்தியா கூட்டணி ஜெயிக்கும் - லியோனி
இதுகுறித்து மூதாட்டி ராஜேஸ்வரி கூறுகையில் :
கோவை சீரநாயக்கன்பாளையம் சுகர் கேன் இன்ஸ்டிடியூட் பணிபுரிந்து ஓய்வு பெற்று 5 லட்ச ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
அதனை தனது நெருங்கிய உறவினரான கஜேந்திரனுக்கு 2020-ம் ஆண்டு கடனாக கொடுத்துள்ளார்.
கஜேந்திரன் பணத்தை 3 மாதத்தில் தருவதாக கூறிய நிலையில் தற்போது வரை பணத்தை திரும்பிக் கொடுக்கவில்லை.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து பிறகு 1.25 லட்சம் பணத்தை சிறுக சிறுக கொடுத்துள்ளார்.
மேலும் மீதமுள்ள 3.75 லட்சத்தை கேட்கும் பொழுது கஜேந்திரனும் அவரது மனைவியும் மூதாட்டியை பயங்கரமாக தாக்கி ஆபாசமாக திட்டி உள்ளனர்.
இது குறித்து காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கும் காவல்துறையினர் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று மூதாட்டி கண்ணீர் மல்க கூறினார்.
கஜேந்திரன் உறவினர் திமுகவில் இருப்பதால் காவல்துறையினர் வழக்கு செய்ய யோசிப்பதாக மூதாட்டி தெரிவித்தார்.