• முகப்பு
  • ஆன்மீகம்
  • பிரசித்தி பெற்ற கீழ்வேளூர் சுந்தர குஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்பம் திருவிழா

பிரசித்தி பெற்ற கீழ்வேளூர் சுந்தர குஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்பம் திருவிழா

செ.சீனிவாசன்

UPDATED: May 8, 2023, 4:09:37 PM

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சுந்தரகுஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சாமி கோவில் அமைந்துள்ளது.

கோச்செங்கோட் சோழனால் கட்டப்பட்ட மாடக் கோவில் ஆகும்.

_________________________________________________

தெப்பக்குளம் வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும் :-

https://youtu.be/xpeENJ3sXDQ

_________________________________________________

சமய குரவர்கள் பாடல் பெற்ற இக்கோவிலில் ஏகதின தீர்த்தோற்சவம் (சித்திரை திருவிழா) கடந்த 14ஆம் தேதி அனுக்கை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது‌ நாள்தோறும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆலயம் முன்பு அமைந்துள்ள சரவணபொய்கை திருக்குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது கல்யாணசுந்தரர், அம்பாளுடன் மின் அலங்கார தெப்பத்தில் எழுந்தருளி, மூன்று முறை தெப்பம் திருக்குளத்தை சுற்றி வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய அட்சயலிங்க சாமி, அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது..

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended