ஆக்ஷன் பிரியர்களுக்கு 'ஜோஷ்வா இமை போல் காக்க' செம விருந்தாக அமையும்" - நடிகர் வருண்.
தீபக்
UPDATED: Feb 27, 2024, 1:10:18 PM
நடிகர் வருண் தனது திரை இருப்பைப் பொருட்படுத்தாமல் பலவிதமான கதாபாத்திரங்களை அச்சமின்றி ஏற்று, தனது கடின உழைப்பை ஒவ்வொரு படத்திலும் கொடுத்துள்ளார்.
Also Watch : பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ?
ஒரு ரொமாண்டிக்கான கதாபாத்திரம், பல படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடிப்பது என்ற நிலையில் இருந்து தற்போது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அவரது வரவிருக்கும் திரைப்படமான 'ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படத்தில் அவர் ஒரு ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் மார்ச் 1, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் வருண், "கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற புகழ்பெற்ற இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது எந்தவொரு ஆர்வமுள்ள நடிகருக்கும் கனவு. அது எனக்கு நிறைவேறி இருக்கிறது. எல்லா ஹீரோக்களும் அவரது இயக்கத்தில் உருவாகும் ஸ்டைலிஷான காதல் கதையில்தான் நடிக்க விருப்பப்படுவார்கள்.
Also Read : தொழிற்சாலை நிர்வாகம் கொடுத்த பொய்யான புகாரில் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கைதா ?
ஆனால், அவர் என்னை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது எனக்கு மகிழ்ச்சியான சர்ப்ரைஸாக இருந்தது. அவருடன் பணிபுரிந்தது எனக்கு முழுமையான ஆசீர்வாதம்.
மேலும், எனக்கு படப்பிடிப்பு தளத்தில் எண்ணற்ற ஃபேன் பாய் தருணங்களும் இருந்தது. சூர்யா சார், அஜித் சார், கமல் சார் போன்ற தமிழ் சினிமாவின் ஐகானிக் கதாநாயகர்களை கெளதம் சாரின் திரைப்படங்களில் பிரமிப்புடன் பார்த்திருக்கிற
இந்தப் படத்தில் ஆக்ஷன் கதாநாயகனாக நான் நடித்தது உண்மையிலேயே நம்பமுடியாத அனுபவமாக இருந்தது.'ஜோஷ்வா இமை போல் காக்க' ஆக்ஷன் பிரியர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆக்ஷன் டைரக்டர் யானிக் பென் மற்றும் அவரது குழுவினரின் பணியை ஒவ்வொரு ஃப்ரேமிலும் பார்க்க முடியும். என்னுடைய சக நடிகர்களான ராஹே, கிருஷ்ணா மற்றும் பிறரின் அசைக்க முடியாத ஆதரவிற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்
'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி இருக்க, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் படத்தைத் தயாரித்து இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் ராஹே கதாநாயகியாக நடித்திருக்க, கிருஷ்ணா முதல் முறையாக வில்லனாக நடித்திருறார்.