தமிழ் மக்களது காணிகளை கபளீகரம் செய்வதை கைவிடுங்கள்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Feb 23, 2024, 11:34:55 AM
தையிட்டியில் மக்களின் பேரெழுச்சி! தாயக நிலங்கள் கையளிக்கப்படும்வரை போராட்டங்கள் விஸ்வரூபம் பெறும் என்று
தை யிட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறிது காலம் அமைதி நிலை கண்டறிந்த போதும் மீண்டும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.
தமிழ் மக்களது காணிகளை சிங்கள பெரும்பான்மை கபளீகரம் செய்வதற்கு முயற்சிப்பதாகவும் பௌத்த விகாரைகளை தமிழ் பிரதேசங்களில் அமைப்பதாகவும் குற்றம் சாட்டியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் கருத்து தெரிவித்தார்.