• முகப்பு
  • இலங்கை
  • 10 வருட  கடூழிய  சிறை தண்டனை விதித்து  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

10 வருட  கடூழிய  சிறை தண்டனை விதித்து  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

கௌசல்யா

UPDATED: Feb 20, 2024, 1:33:12 PM

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டத்தில் இயங்கிய பிரஜா சக்தி நிலையத்தில் கடமையாற்றிய நபர் ஒருவருக்கு 10 வருட  கடூழிய  சிறை தண்டனை விதித்து  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.நடராஜ் விஜயகுமார் வயது (36) என்ற நபருக்கு எதிராக இந்த கடூழிய சிறை தண்டனையை  நுவரெலியா மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரிய  (20.02.2024) வழங்கினார்.

கடந்த (06.07.2017) ஆம் ஆண்டு அக்கரப்பத்தனை கிலாஸ்கோ தோட்டத்தில் இயங்கிய பிரஜா சக்தி நிலையத்தில் கடமையாற்றிய குறித்த நபர் அக்காலப்பகுதியில் பிரஜா சக்தி திலையத்தில் கல்வி கற்க வந்திருந்த 18 வயதுக்கும் குறைவான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Also Read .பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

இவருக்கு எதிராக நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்து.இவர் மீதான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக கடந்த ஆறு வருடங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளியாக இனங்கானப்பட்ட இவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி (20.02.2024) இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் ஐந்து இலட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் இல்லாவிட்டால் மேலும் மூன்று வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், நீதிமன்ற தண்டனை பணமாக ரூபாய் 25 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் மேலும் ஆறு மாதங்கள் சிறை  தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும்  நீதவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Also Read .ஊவா கல்வி ஊழியர்களின் முப்பதாவது வருட பூர்த்தி விழா


அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டத்தில் இயங்கிய பிரஜா சக்தி நிலையத்தில் கடமையாற்றிய நபர் ஒருவருக்கு 10 வருட  கடூழிய  சிறை தண்டனை விதித்து  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடராஜ் விஜயகுமார் வயது (36) என்ற நபருக்கு எதிராக இந்த கடூழிய சிறை தண்டனையை  நுவரெலியா மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரிய  (20.02.2024) வழங்கினார்.

கடந்த (06.07.2017) ஆம் ஆண்டு அக்கரப்பத்தனை கிலாஸ்கோ தோட்டத்தில் இயங்கிய பிரஜா சக்தி நிலையத்தில் கடமையாற்றிய குறித்த நபர் அக்காலப்பகுதியில் பிரஜா சக்தி திலையத்தில் கல்வி கற்க வந்திருந்த 18 வயதுக்கும் குறைவான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.இவருக்கு எதிராக நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்து.

இவர் மீதான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக கடந்த ஆறு வருடங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளியாக இனங்கானப்பட்ட இவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி (20.02.2024) இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

Also Read. யுத்தத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு வீடுகள்

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் ஐந்து இலட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் இல்லாவிட்டால் மேலும் மூன்று வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், நீதிமன்ற தண்டனை பணமாக ரூபாய் 25 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் மேலும் ஆறு மாதங்கள் சிறை  தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும்  நீதவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended