மாணவர்களின் திறமைக்கு முதலிடம் - திறமை வெளிக்கொணரப்பட்டு கௌரவிப்பு
பஸ்ளான்
UPDATED: Jul 28, 2024, 3:38:06 AM
கல்வியால் சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளை நோக்காகக் கொண்டு ஐ.என்.எஸ். ஒன்லைன் கல்லூரியினால் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பொது அறிவுப் போட்டியில் சுமார் 2800 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற 230 மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில் பரிசளிப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கண்டி நகரில் சம்பத் மண்டபத்தில் ஐ.என்.எஸ். ஒன்லைன் கல்லூரியின் நிர்வாக தலைவி Naja தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக international human rights global mission ஊடகப் பணிப்பாளர் ஊடகவியலாளர் ஏ.டபிள்யூ.எம்.பஸ்லான் , யாழ் பல்கலைக்கழக மாணவரும், இளம் பேச்சாளரும்,செய்தி வாசிப்பாளருமான நிஹ்லான் ஜுனைதீன் , international human Rights global mission இஸ்லாமிய கலாச்சார விவகார ஒருங்கிணைப்பாளரான எஸ்.எச்.எம்.றிஸ்வான் மற்றும் , international human rights global mission பெண்கள் மற்றும் சிறுவர் விவகார ஒருங்கிணைப்பாளர் றுக்ஸானா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
விசேட அதிதியாக கலந்து கொண்ட நிஹ்லான் ஜுனைதீன் அவர்களால் விசேட உரை நிகழ்த்தப்பட்டது. குறிப்பாக வெற்றி பெற்ற மாணவர்களின் திறமைக்கு முதலிடம் வழங்கப்பட்டு அவர்களின் திறமை வெளிக்கொணரப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் கழை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது பிரதம அதிதிகளாக கலந்து கொண்டவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு இந்நிகழ்வில் சுமார் 230 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.