• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கும்பக்கரை அருவி துர்நாற்றம் வீசும் நீரில் காத்திருந்து குளிப்பதால் உடல் உபாதை ஏற்படும் அபாயம் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது ஏன் ?

கும்பக்கரை அருவி துர்நாற்றம் வீசும் நீரில் காத்திருந்து குளிப்பதால் உடல் உபாதை ஏற்படும் அபாயம் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது ஏன் ?

ராஜா

UPDATED: Apr 26, 2024, 7:48:30 PM

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி.

இந்த அருவிக்கு நீர் வரத்தானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதியில் உள்ள வெள்ளகெவி, வட்டக்கானல், உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையினால் கும்பக்கரை அருவிக்கு நீர் வருகின்றது.

இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யாது போனதால் அருவிக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. 

இந்த நிலையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக தேனி மதுரை திண்டுக்கல் விருதுநகர் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரும் நிலையில் முற்றிலும் குறைந்த அளவில் வரும் நீரில் ஒவ்வொரு நபராக குளித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைவதோடு கோடை வெயிலின் தாக்கத்தை தனித்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் குறைந்த அளவில் கொட்டி வரும் நீரில் ஆண்கள் அதிக அளவில் நின்று கொண்டு பல மணி நேரமாக குளிக்கும் நிலையால் பெண்கள் அருவியில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே கும்பக்கரை அருவியில் துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ள குறைந்த அளவு நீரில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வனத்துறையினர் மழை பெய்து அருவியல் நீர் வரத்து அதிகரித்து வரும் வரை கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடை விதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் துர்நாற்றம் வீசும் அருவி நீரில் குளிப்பது குறித்து தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறை அதிகாரி டேவிட்ராஜிடம் கேட்டபோது

நீர் துர்நாற்றம் வீசுகின்றதா என பார்வையிட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிப்பதா என்பது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended