- முகப்பு
- மாவட்டச் செய்தி
- விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் பணபலம் அதிகாரபலத்தையும் காட்டுகின்ற தேர்தல் முடிவாக பார்க்கிறோம் - ஜி.கே.வாசன் பேட்டி.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் பணபலம் அதிகாரபலத்தையும் காட்டுகின்ற தேர்தல் முடிவாக பார்க்கிறோம் - ஜி.கே.வாசன் பேட்டி.
ஜெயராமன்
UPDATED: Jul 14, 2024, 6:11:35 AM
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.பி. ராதாகிருஷ்ணன் இல்ல திருமண வரவேற்பு விழா திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
விழாவிற்கு வருகை தந்த த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது..
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் என்பது பணபலம் அதிகாரபலத்தையும் காட்டுகின்ற தேர்தல் முடிவாக பார்க்கிறோம்.
தி.மு.கவை சார்ந்த கூட்டணி கட்சிகளின் தவறான அணுகுமுறைகளை தாண்டி 55 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பா.ம.க. பெற்றுருப்பது என்பது வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த நல்ல செய்தியாகும். இதுபோன்ற பணபலம், அதிகாரபலத்திற்க்கு முற்றுப்புள்ளி தேர்தலாக 2026 சட்டமன்ற தேர்தல் அமையும்.
இந்த இடைத்தேர்தலில் தி,மு.க. கூட்டணியின் அனுகுமுறை, கோட்பாடு, செயலாற்றிய முறைகளை பற்றி தேர்தல் ஆணையம் கண்டு கொள்ள வில்லை கவலைப்படவில்லை. இது மக்களுக்கு கவலை அளிக்கும் செய்தியாகும்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அனைத்து தரப்பு மக்களும் அச்சம் கொள்ளும் வகையில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கமாக திமுக அரசாங்கம் செயல்படுகிறது.
இரும்பு கரம் கொண்டு சட்டஒழுங்கை நிலை நாட்டிட வேண்டும் என த.மா.கா. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கள்ள சாராயம், போதை பொருட்கள் பெருகி விட்டன. கணக்கில்லாமல் டாஸ்மாக் கடை பல நேரம் திறந்து இருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா இடம் பெறும், தொடர்ந்து மக்களை சந்தித்து கூட்டணி பொறுப்பாளர்கள் வெற்றிக்காக வலு சேர்ப்போம்.
நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் கைது குறித்த கேள்விக்கு அதிகார வர்க்கத்தின் உச்சகட்டம் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வளர்ச்சி என்பது அதிகரித்து வருகிறது. அதனை பொறுக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.
காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு நியாயமான முறையில் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக வழங்க மறுப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றார்.