- முகப்பு
- மாவட்டச் செய்தி
- செண்பகத்தோப்பு சுற்றுலாத் தளத்திற்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை.
செண்பகத்தோப்பு சுற்றுலாத் தளத்திற்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை.
அந்தோணி ராஜ்
UPDATED: Nov 3, 2024, 8:19:49 AM
விருதுநகர் மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் செண்பகத்தோப்பு அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஏராளமான அருவிகள், நீரோடைகள், புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன.
செண்பகத்தோப்பிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் வந்து குளித்து மகிழ்ந்து சாமி தரிசனம் செய்து வருவார்கள்
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை உச்சி பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக பேச்சி அம்மன் கோயில் பின்புறமுள்ள நீரோடையில் செம்மண் நிறத்தில் காட்டாற்று வெள்ளம் கரை புரள தொடங்கியது.
செண்பகத்தோப்பு சுற்றுலா தளம்
நீரோடைகளில் தண்ணீர் அதிகளவில் நிறம் மாறி வருவதை கண்ட பொதுமக்கள், நீரோடையின் மறுகரையில் இருந்தவர்களே தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன மழை பெய்து திடீரென ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால் ராக்காச்சி அம்மன் கோவில் ராஜபாளையம் அய்யனார் கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு சுற்றுலாத் தளத்திற்கு பொதுமக்கள் செல்வதற்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
அதையும் மீறி சுற்றுலாத் தளத்திற்கு செல்லும் பொதுமக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.