• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பெரம்பலூர் அருகே குடிநீர் கிணறு அருகே கதிர் அடிக்கும் களத்தினை மாற்று இடத்திற்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

பெரம்பலூர் அருகே குடிநீர் கிணறு அருகே கதிர் அடிக்கும் களத்தினை மாற்று இடத்திற்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

மைக்கேல்

UPDATED: Apr 29, 2024, 10:37:59 AM

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் கிழக்குப் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கதிர் அடிக்கும் களம் மற்றும் தானியக்கிடங்கு பணிகள் துவங்குவதாக அரசு ஆரம்ப துணை சுகாதாரம் நிலையம் மற்றும் குடிநீர் கிணறு அருகே பணி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டதால்

இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் கிணறு உள்ளதால் இப்பகுதியில் கதிர் அடிக்கும் களம் மற்றும் தானியக்கிடங்கு அமைக்க வேண்டாம் என்று ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் மனு அளித்தினர்.

இவ்விடத்தில் கதிர் அடிக்கும் களம் அமைத்தால் குடிநீர் மாசு ஏற்படும் என்றும் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள் வரும் பொழுது பாதிப்பு ஏற்படும் என்றும் இதனை அறிந்து இவ்விடத்தில் அமைக்க வேண்டாம் என்று பொதுமக்கள் சார்பில் கூறப்பட்டது.

ஆனால் அதனை ஏற்காமல் அப்பகுதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி இவ்விடத்தில் தான் இந்த பணி நடைபெறும் நீங்கள் சொல்லுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்த பணி இவ்விடத்தில் நடைபெறும் என்று அந்த இடத்தை சுத்தம் செய்தனர்.

இத்தகவலை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அப்பகுதி பொது மக்கள் ஒன்று சேர்ந்து இவ்விடத்தில் பணி நடைபெற கூடாது என்று தடுத்தனர். இதனால் இப்பகுதியில் களம் அமைக்காமல் திரும்பி சென்றனர் .

பொதுமக்களின் தேவையை அறிந்து தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சம்மந்தபட்ட இடத்தில் தலையிட்டு எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் சரி செய்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று போர்க்கால அடிப்படையில் பணி நடைபெற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையாக வைக்கின்றனர்.

 

  • 1

VIDEOS

Recommended