எங்களது ஊராட்சிக்கு டாஸ்மாக் கடை வேண்டும் என மது பிரியர் ஆட்சியருக்கு மனு.

செந்தில் முருகன்

UPDATED: Aug 3, 2024, 10:23:10 AM

மயிலாடுதுறை மாவட்டம் 

மூவலூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பட்டமங்கலம், ஆனைமேலகரம், மறையூர், மூவலூர், சித்தர்காடு ஆகிய கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கி மக்களுடன் முதல்வர் முகாம் இன்று நடைபெற்றது.

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் மனுக்கள் வழங்கினர். அப்போது மூவலூர் கிராமத்தைச் சேர்ந்த குமரகுருபன் என்பவர் மூவலூர் ஊராட்சிக்கு என தனியாக மதுக்கடை அமைத்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார்.

Latest Tamilnadu News Tamil

தொடர்ந்து மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய ஆலோசனை செய்யப்படும் என மனு அளித்த மது பிரியர்களுக்கு தெரிவித்து அனுப்பி வைத்தனர். 

பின்னர் பேசிய மனுதாரர் அருகே மாப்படுகை ஊராட்சியில் உள்ள மதுபான கடையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்வதாகவும் , தங்கள் ஊராட்சிக்கு என தனி மதுக்கடை அமைத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

Latest Mayiladuthurai News Tamil

மேலும் அருகே உள்ள மதுபான கடை காவேரி கரையின் ஓரம் இருப்பதால் ஆற்றில் தவறி விழுந்து மது பிரியர்கள் இறக்கக்கூடும் சூழல் இருப்பதாகவும் கூறினார். 

மேலும் தங்கள் பகுதி அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் ஒரு மனமகிழ் மன்றம் ஆவது அமைத்து தர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தது அப்பகுதியில் உள்ள அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

 

VIDEOS

Recommended