குற்றவாளி அண்ணாமலை கஞ்சா மறைத்து வைத்திருந்த போது கையும் களவுமாக பிடிபட்டார்.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 20, 2024, 1:13:11 PM

குன்றத்தூர் மற்றும் மாங்காடு சுற்றுவட்டாரங்களில் கஞ்சா விற்பனை

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மற்றும் மாங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் பெயரில் குன்றத்தூர் காவல் ஆய்வாளர் வேலு அவர்கள் , உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா குற்றவாளிகளை தேடி வந்தனர். 

இந்நிலையில் குன்றத்தூர் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மறைவாக நின்று கொண்டிருந்த நபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தனர்.

சரித்திர பதிவேடு குற்றவாளி

அந்த நபர் வைத்திருந்த ஒரு பையில் 1 கிலோ 150 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டு அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து அந்த நபரை காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட காவலர்கள் கைது செய்து குன்றத்தூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

காவல்துறையினரின் விசாரணையில், கஞ்சா வைத்திருந்த நபரின் பெயர் வி.அண்ணாமலை என்றும் இவர் மாங்காடு நகரில் சின்ன பாண்டிச்சேரி என்ற இடத்தில் வசிப்பவர் என்றும், இவர் மாங்காடு காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் தெரியவந்தது.

ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம்

அதுமட்டுமல்லாமல் அண்ணாமலை மீது ஏற்கனவே இரண்டு கஞ்சா வழக்குகள் உள்ளதும், தற்போது பள்ளி மாணவர்கள் மற்றும் கூலித் தொழிலாளிகளுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக காத்திருந்த போது காவல்துறையினர் கைது செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

ஸ்ரீபெரும்புதூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

VIDEOS

Recommended