- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சூரியனார் கோவில் ஆதீனத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் - இந்து எழுச்சி பேரவை
சூரியனார் கோவில் ஆதீனத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் - இந்து எழுச்சி பேரவை
JK
UPDATED: Nov 25, 2024, 5:43:00 PM
திருச்சி
இந்து எழுச்சி பேரவை மாநில தலைவர் மாநில தலைவர் பழ.சந்தோஷ் குமார் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
மதுரை ஆதீனம், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தை பற்றியும் அதன் நிர்வாகிகளை பற்றியும் நக்கீரன் இதழில் அவதூறாக பேசியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள், வீடியோவும் வெளியானது.
இதில் மதுரை ஆதீனம் சொல்லாத விஷயங்களை திரித்து ஆதீனங்கள், ஆன்மீக அமைப்புகளுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கோடு தகவல்களை வெளியிட்டுள்ளது கண்டனத்துக்கு உரியது.
ஈஷா யோகா மையம் மரக்கன்றுகளை நடுவது , திருமுறைகளை பரப்புவது, இயற்கையை பாதுகாப்பது என பல்வேறு மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதை திசை திருப்பி அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு இது போன்ற தகவல்கள் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.
ஈஷா யோகா மையத்தை பற்றி மதுரை ஆதீனம் எந்தவிதமான தவறான தகவல்களையும் பேசவில்லை.
சூரியனார் கோவில் ஆதீனம் 14ம் நூற்றாண்டு முதல் சிறப்போடு சைவப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் 23-வது குரு மகா சன்னிதானம் மகாலிங்க சுவாமிகள் திருமணம் செய்ததாக தகவல் வெளியானது தொடர்ந்து அவரே மடத்தை விட்டு வெளியேறிவிட்டார்.
இந்த நிலையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மடத்தை கையகப்படுத்த முயற்சிப்பது கண்டனத்திற்கு உரியது.
பல நூற்றாண்டுகளாக செயல்பட்டு வரும் அரசியலமைப்பு சட்ட அடிப்படையில் உள்ள அறநிலையத்துறை கையகக்படுத்த நினைப்பதை கைவிட வேண்டும்.
இது குறித்து அமைச்சரிடம் தொலைபேசி பேசிய நெல்லை சைவ சித்தாந்த கூட்டமைப்பு நிர்வாகியை மிரட்டும் துணியில் அமைச்சர் பேசியிருப்பது ஏற்புடையது அல்ல ஆதீன விஷயங்களில் இந்து சமய அற நிலையத் துறை வரம்பு மீறி செயல்படக்கூடாது.
ஆவணப்படுத்தவும் தணிக்கை செய்யவும் உள்ள அறநிலையத்துறை மரபுகளை கபளீகரம் செய்யவும், மாண்புகளை சீர்குலைக்கவும் முயற்சிக்கக் கூடாது.
சூரியனார் கோவில் ஆதீனமாக யாரை நியமிப்பது என தமிழகத்தில் உள்ள தமிழகத்தில் உள்ள 18ஆதீனங்களும் ஒன்றிணைந்து முடிவு செய்வார்கள் என தெரிவித்தார்.
பேட்டியின் பொதுச்செயலாளர் சதீஷ்கண்ணா, திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் அரிகரன், இளைஞரணி தலைவர் விக்னேஷ், மாவட்ட தலைவர்கள் செந்தில்குமார், தினேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.