• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பாதுகாத்து வளர்க்கப்பட்ட இயற்கை மரங்களை அழித்த அரசு மின்சாரத்துறை ஊழியர்கள், கொதித்தெழுந்த பசுமை பாதுகாவலர்களும் , தன்னார்வலர்களும் போலீசில் புகார்.

பாதுகாத்து வளர்க்கப்பட்ட இயற்கை மரங்களை அழித்த அரசு மின்சாரத்துறை ஊழியர்கள், கொதித்தெழுந்த பசுமை பாதுகாவலர்களும் , தன்னார்வலர்களும் போலீசில் புகார்.

செ.சீனிவாசன்

UPDATED: Jun 22, 2024, 9:51:41 AM

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா வலிவலம் ஊராட்சியில், கஜா புயலினால் ஏற்பட்ட கோரத்தாண்டவத்தில் அழிந்த மரங்களை மீட்டெடுக்கும் விதமாக, பசுமை வலிவலம் இயக்கம் மற்றும் வனம் தன்னார்வலர் அமைப்பு இணைந்து வலிவலம் ஊராட்சியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த கருவேல மரங்களை அகற்றி சுமார் 500க்கும் மேற்பட்ட நாட்டு ரக மரங்களை நடவு செய்து குறுங்காடு அமைத்து சுமார் 5 ஆண்டுகளாக பராமரித்து வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக வந்த மின்சாரத் துறையினர், வலிவலம் ஊராட்சியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பிக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது, அப்போது இயற்கை வளங்களை பாதுகாக்க நடப்பட்டிருந்த குறுங்காட்டிலுள்ள 50க்கும் மேற்பட்ட மரங்களை அடியோடு வெட்டி வீழ்த்தியுள்ளனர். இதற்கு பசுமை வலிவலம் இயக்கம், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர். 

இது குறித்து வலிவலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட இவர்கள், இயற்கையை அழித்த அவர்கள் மீது புகார் கொடுத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தமிழக அரசும், பசுமையை பாதுகாப்பு இயக்கங்களும் ஒன்றிணைந்து வெட்டி வீழ்த்தப்பட்ட 50க்கும் மேற்பட்ட மரங்களுக்கு ஈடு செய்யும் விதமாக அரசுக்கு சொந்தமான இடத்தில் 300-க்கும் மேற்பட்ட நாட்டு ரக மரங்களை நடவு செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended