தவப்புதல்வி ஊரக பெண்கள் திறன் மேம்பாட்டு சாதனை.

முகேஷ்

UPDATED: Sep 28, 2024, 2:07:50 PM

பெண்களே பெண்களால் பெண்களுக்காக எனும் நோக்கில் பெண்களின் திறன் மேம்பாட்டு வளர்ச்சி பெண் தொழில் முனைவோர் உருவாக அடித்தளமாக விளங்கும் என்பதை கருத்தில் கொண்டு ,

200 பெண் தையல் கலைஞர்களை தேர்வு செய்து வண்ணமயமான துணிகளில் மேலங்கி தயார் செய்யும் பயிற்சி தவப்புதல்வி எனும் தனியார் செயல் திட்டம் செய்தது.

இதில் மேலங்கி தைக்க முழுவதுமாக பயிற்சி பெற்ற 200 பெண்கள் 20 நாட்களில் 2024 மேலங்கி தயார் செய்து குளோபல் உலக சாதனை பெற்றனர். 

இதில் முக்கிய நிகழ்வாக 1000 த்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கு பெற்று மேலங்கி அணிந்து பெண்களாகிய நாங்கள் பெண்களில் அறிவுசார் மற்றும் ஆளுமை வளர்ச்சியில் வீட்டின் வளர்ச்சி இருக்கிறது என்பதாலும்,

பெண்களின் பொருளாதார வளர்ச்சியில் நாட்டின் வளர்ச்சி இருக்கிறது என்பதாலும், பெண்களின் அறிவுசார், ஆளுமை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக கல்வி மற்றும் விழிப்புணர்வு முழுவதும் பெற்றவர்களாகவும்,

பெண் தொழில்முனைவோராக உருவாவதினால் தன்னுடைய பொருளாதார ரீதியான வளர்ச்சியுடன் மற்றவர்களின் பொருளாதார வளர்ச்சியிலும் பங்களிக்க முடியும் என்பதாலும், திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் சுயதொழில்முனைவோருக்கான பயிற்சி என அனைத்தையும் பெற்று தன்னுடைய சமூக பொருளாதார வளர்ச்சிக்காகவும் ,

அதன் மூலம் வீடும் நாடும் வளர்ச்சியடைய பொறுப்புள்ள பெண்ணாக இருந்து நல்ல சமூகத்தை உருவாக்க எங்களை போன்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் உதவியாகவும் உறுதுணையாகவும் இருப்பேன் என உறுதியளிக்கிறோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

தவப்புதல்வி தனியார் செயல் திட்டத்தின் தலைவர் மற்றும் ஜே சி ஐ கன்னியகுமாரி பயோனியரின் தலைவர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை அவர்கள் பேசும்பொழுது ஒவ்வொரு பெண்ணின் கல்வி,

ஆளுமை மற்றும் திறன் வளர்ச்சி ஒரு குடும்பத்தின் வளர்ச்சியை மட்டும் உறுதி செய்யாமல் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும், அதுவே நாட்டின் முழுமுதற் வளர்ச்சிக்கு வித்திடும் எனவும் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜே சி ஐ மண்டலம் 18-ன் தலைவர் சிபி அவர்களும் திருநெல்வேலி மாவட்டம் மகளிர் திட்ட அலுவலர் இலக்குவன் அவர்களும் கலந்து கொண்டு தையல் கலைஞர்களாக இருந்து தொழில்முனைவோராக உருவெடுத்த பெண்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்கள்.

பெண்களின் இதுபோன்ற புதுமையான முயற்சியில் அவர்கள் உருவாக்கிய பொருட்களை டிஜிட்டல் மார்க்கெட்டிங் உக்தியின் மூலம் சந்தையிடுவதில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும்

அந்த பொறுப்பினை ஜே சி ஐ கன்னியாகுமரி பயோனியர் விரைவில் அமல் படுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவுபெற்றது.

 

VIDEOS

Recommended