• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தனியார் கம்பெனி ஊழியர்கள் வாகனங்களை சிறைபிடித்து போராட்டம் செய்வதால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் பல கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம்.

தனியார் கம்பெனி ஊழியர்கள் வாகனங்களை சிறைபிடித்து போராட்டம் செய்வதால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் பல கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம்.

சுந்தர்

UPDATED: Jun 25, 2024, 7:01:24 PM

சென்னை மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஏ.எஸ்.சிப்பிங் கம்மெனி என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு பிரபல தனியார் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் வீட்டு உபயோக பொருட்கள், இறைச்சிகள், விலை உயர்ந்த மரங்கள், கிரானைட் கற்கள் கண்டெய்னர் மூலம் ஏற்றப்பட்டு சென்னை துறைமுகத்தில் கொண்டு சென்று கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இங்கு பணி புரியக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடத்த மூன்று நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் துறைமுகத்திற்கு செல்ல வேண்டிய கண்டெய்னர் லாரிகள் செல்ல முடியாமல் ஊழியர்கள் சிறை பிடித்துள்ளதால் பல கோடி மதிப்பிலான பொருட்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது

இதனால் கண்டெய்னர் மூலம் பொருட்களை அனுப்பிய நபர்களும், ஏற்றுமதி நிறுவனமும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் பேச்சு வார்த்தையில் உரிய உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய பல கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி உரிய நேரத்தில் பொருட்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வில்லை என்றால் இந்திய ரூபாய் மதிப்பு இல்லாமல் வெளிநாட்டு ரூபாய் மதிப்பில் அபராதம் விழும் எனவும் பல கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்துள்ளதால் ஏற்றுமதி தொழில் பாதிக்கப்படும் என புகார் தெரிவித்துள்ளனர்

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து கம்பெனி நிர்வாக சார்பில் மேலாளர் தெரிவிக்கையில் போராட்டம் செய்வது என்றால் முறைப்படி முன்னதாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும் அப்படி கொடுக்காமல் ஊழியர்கள் வாகனங்களை சிறைப்பிடித்து போராட்டம் செய்து வருவதால் பல கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்துள்ளதாகவும் மேலும் அழுகக்கூடிய பொருட்களும் இங்கு உள்ளதால் அவைகளை உடனடியாக ஏற்றுமதி செய்யாவிட்டால் டாலர் கணக்கில் பணம் வீணாகிவிடும் எனவும் எனவே போராட்டத்தை கைவிட்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டால் அனைவருக்கும் நல்லது என நிர்வாகம் சார்பில் தெரிவித்தார்.

அதேபோல் இதில் 30-க்கும் மேற்பட்ட கம்பெனி சேர்ந்த பொருட்கள் உள்ளே இருப்பதாகவும் எனவே அந்த பொருட்களை உடனடியாக வெளியே எடுத்தால் பல பேர் வாழ்க்கை காப்பாற்றப்படும் எனவும் கம்பெனி நிர்வாகமும் ஊழியர்களும் சுகமான பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என இந்த கம்பெனியில் பொருட்களை ஏற்றுமதி செய்ய கொடுத்துள்ள தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் போராட்டம் செய்பவர்கள் கூறுகையில் தங்களுக்கு தற்போது வரை எந்த ஒரு இன்சூரன்ஸ்சும் கம்பெனி சார்பில் வழங்கப்படவில்லை என்றும் விபத்தில் அடிபட்டவருக்கு கூட தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதாகவும் தங்களுக்கு இன்சூரன்ஸ், ஊதிய உயர்வு போன்றவை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்

அதேபோல் டிரைவர்களை மதிப்பதில்லை எனவும் அடிக்க வருவதாகவும் கேட்கப் போனால் சண்டை போடுவதாகவும் அதனை எல்லாம் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதனை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1.சுப்பாராவ் (AS .சிப்பிங் கம்பெனி மேலாளர்)

2.நாரயணண் (தனியார் கம்பெனி ஊழியர்)

3.தண்டபாணி (ஏ.எஸ்.சிப்பிங் கம்பெனி தொழிலாளி) .

 

VIDEOS

Recommended