• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • விருதுநகர் மானகசேரி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

விருதுநகர் மானகசேரி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

அந்தோணி ராஜ்

UPDATED: Sep 9, 2024, 11:03:18 AM

விருதுநகர் மாவட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மானகசேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

மேலும் இந்த கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் மதுபானக் கடை அமைந்துள்ளதாகவும்,

அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் வீட்டில் பணம் வாங்கிவிட்டு பள்ளிக்கு செல்வதாக கூறி மதுபான கடைக்கு சென்று அங்கு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதாகவும் இதனால் தங்கள் பிள்ளைகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக உள்ளதாகவும்,

Breaking News In Tamil

மேலும் தங்கள் கிராமத்தில் உள்ள ஆண்கள் பெரும்பாலானோர் பட்டாசு, மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணி புரிந்து வருவதாகவும் வேலை முடிந்தவுடன் மதுபானக் கடைக்கு நேரில் சென்று மது அருந்தி விட்டு தங்களது குடும்பத்தை கவனிக்காமல் சண்டை போடுவதாகவும், .

மேலும் சிலர் தொடர்ந்து மது அருந்தி அதனால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் இறந்ததாகவும் தெரிவித்தனர்.

Latest Virudhunagar News in Tamil 

மேலும் இது சம்மந்தமாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று அந்த கிராமத்தைச் சேர்ந்து 100 க்கும் மேற்பட்ட பெது மக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இந்த மனுவின் மீது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தங்கள் கிராமத்தில் அறவழியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தப் போவதாக தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended