கும்மிடிப்பூண்டி அருகே காணாமல் போன சிறுவன் தரை கிணற்றில் சடலமாக மீட்பு.

L.குமார்

UPDATED: Nov 28, 2024, 8:53:04 AM

கும்மிடிப்பூண்டி

புது கும்முடிப்பூண்டி ஊராட்சி பால யோகி நகரில் உள்ள வாடகை வீட்டில் தங்கி வாழ்ந்து வருபவர் தனியார் தொழிற்சாலை ஊழியர் பூபாலன் (47). ஆந்திர மாநிலம் சத்தியவேட்டைச் சேர்ந்த இவருக்கு சரிதா (42) என்ற மனைவியும் பாவனா (15) என்ற மகளும் டெண்டுல்கர் குமார் (13) என்ற மகனும் உள்ளனர். 

இந்நிலையில் பள்ளிகள் விடுமுறை நாளான நேற்று புது கும்மிடிப்பூண்டி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் பள்ளி சிறுவன் டெண்டுல்கர் குமார் சக நண்பர்களுடன் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள தரைக்கு கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். 

Breaking News In Tamil

அப்போது கிணற்று படியிலிருந்து தவறி விழுந்த பள்ளி சிறுவன் டெண்டுல்கர் குமார் மாயமான நிலையில் சக நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

பெற்றோர்கள் சிறுவன் டெண்டுல்கர் குமார் காணாமல் போனதாக அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காத நிலையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

Latest News Today In Tami

தகவலின் பேரில் விசாரணையில் இறங்கிய சிப்காட் போலீசார் சிறுவன் கிணற்றில் மாயமானதை உறுதி செய்தனர். தொடர்ந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டு தரைக்கிணற்றில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். 

சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended