• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • புவனகிரி அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு வேன் கவிழ்ந்து விபத்து ஐந்து பேர்  மருத்துவமனையில் அனுமதி.

புவனகிரி அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு வேன் கவிழ்ந்து விபத்து ஐந்து பேர்  மருத்துவமனையில் அனுமதி.

சண்முகம்

UPDATED: May 6, 2024, 6:22:25 AM

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு.உடையூர் கிராம பகுதியில் கோவிலுக்கு சென்று விட்டு வடலூர் நோக்கி சொகுசு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சொகுசுவேனில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர்.

அப்போது சொகுசு வேன் சாலை வளைவில் திரும்பும்போது எதிர்பாராமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பத்தடி பள்ளத்தில் உருண்டு, வயலில் விழுந்து ஏற்பட்டது. இதில் சொகுசு வேனில் பயணம் செய்த 10க்கு மேற்பட்ட நபர்களில் ஐந்து பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மற்றவர்களுக்கு லேசான அடி மட்டுமே. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இரவு நேரத்தில் ஆள் அரவமற்ற பகுதியில் இந்த விபத்து ஏற்பட்ட நிலையிலும் அவ்வழியாக வந்த ஒருவர் காவல்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார்.

மேலும் இவருடன் கிராம மக்களும் சேர்ந்து உடனடியாக காயம் பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

  • 2

VIDEOS

RELATED NEWS

Recommended