- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து காரின் பயணித்த குழந்தை உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து காரின் பயணித்த குழந்தை உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
சண்முகம்
UPDATED: Sep 12, 2024, 8:11:15 AM
மயிலாடுதுறை மாவட்டம்
நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த முகமது அன்வர் யாசர் ஹரபத்.ஷஜிதா வேகம் ஹர்பத் நிஷா. மற்றும் மூன்று வயது ஆண் குழந்தை அஃப்லன் இவர்கள் ஐந்து பேரும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று அன்வர் அவர்களது சகோதரி துபாயில் உடல்நிலை சரியில்லாமல் கோமா ஸ்டேஜில் சென்னை கொண்டுவரப்பட்டார்கள்
அவர்களை ஆம்புலன்ஸில் வைத்து பாண்டிச்சேரியில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையை சேர்த்த பின்பு இரவு 1.30 மணி அளவில் பாண்டிச்சேரியில் இருந்து தங்களது சொந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் நக்கம்பாடி கிராமத்தை நோக்கி சென்றனர் இதில் டிரைவராக யாசர் அரபத் காரை ஓட்டி வந்துள்ளார் இவர்கள் விழுப்புரம்.
Latest District News in Tamil
நாகை தேசிய நெடுஞ்சாலை பி. முட்லூர் ஆனையங்குப்பம் கிராமத்தில் கார் வந்த பொழுது மேம்பாலத்தில் ஒரு பகுதியில் வேலை நடைபெறுவதால் ஒரு பகுதி மட்டும் போக்குவரத்து நடைபெற்று இருந்தது
ஆனால் நெடுஞ்சாலை துறையினர் அந்த இடத்தில் எந்தவிதமான முன்னறிவிப்பு பலகையும் வைக்காமல் ஒரு பேரிங் காடு வைக்கவில்லை ஒரு வழி பாதையில் செல்லும் பொழுது எதிரில் வந்த லாரி காருடன் நேருக்கு நேர் மோதியது இதில் சம்பவ இடத்தில் ஐந்து பேரும் விபத்துக்குள்ளானார்கள் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் இறந்து விட்டனர் இரண்டு பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்கள்
மாவட்ட முக்கிய செய்திகள்
இது தொடர்பாக சிதம்பரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் லா மேக் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் அடிபட்டவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்
இது தொடர்பாக பரங்கிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
விடியற்காலை விபத்து நடந்ததால் அந்த கிராமமே சோகத்தில் முழுகியது விபத்தை பற்றி கேள்விப்பட்டவுடன் இஸ்லாமிய சகோதரர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வர வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.