நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம்.

அந்தோணி ராஜ்

UPDATED: Sep 20, 2024, 7:48:14 PM

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 9, 10, 11 வது வார்டுகள் மற்றும் கிருஷ்ணாபுரம், தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி பகுதிகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் இதுவரை சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்பது இவர்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டு.

இங்கு செயல்படும் நகராட்சி நடுநிலை பள்ளி 100 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. இவர்களின் தேவைக்காக கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை கட்டடம் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ளது.

மேலும் பல மாதங்களாக அதிகரித்து காணப்படும் வெறிநாய் தொல்லையை கட்டுப்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் தவறிவிட்டதாக கூறப்படுகிறது.

Breaking News Today In Tamil 

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள், கல்வி துறை அதிகாரிகள், ஒன்றிய அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முடங்கியாறு சாலையில் உள்ள சம்பந்தபுரம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 80 பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Latest Virudhunagar District News In Tamil 

கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கலந்து கொண்ட பெண்கள் மற்றும் ஆண்கள் அடிப்படை வசதிகள் செய்து தர கோரியும், வெறிநாய் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், நியாய விலை கடையை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரியும், நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

 

VIDEOS

Recommended