• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சாலையோர வியாபாரிகளின் வியாபார குழு தேர்தல் பட்டியலில் குளறுபடி - தேர்தலை புறக்கணிப்பதாக தரைக்கடை வியாபாரிகள் அறிவிப்பு

சாலையோர வியாபாரிகளின் வியாபார குழு தேர்தல் பட்டியலில் குளறுபடி - தேர்தலை புறக்கணிப்பதாக தரைக்கடை வியாபாரிகள் அறிவிப்பு

JK

UPDATED: Nov 4, 2024, 7:38:43 PM

திருச்சி

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடத்தில் அனைத்து தரைக்கடைகள் வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 500க்கு மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் சாலையோர வியாபாரிகளின் வியாபார குழு தேர்தல் வருகிற 22ந்தேதி நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் தேர்லுக்கு முன்பாக எடுத்த கணக்கெடுப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது.

குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் உள்ள தரைக்கடை வியாபாரிகள் மட்டுமல்லாமல் பல்வேறு தொழில் செய்பவர்கள் தரைக்கடை வியாபாரிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், லால்குடி, மண்ணச்சநல்லூர் நகராட்சிகளை சேர்ந்த தரைக்கடை வியாபாரிகளையும் இணைத்துள்ளனர்.

கணக்கெடுப்பில் உள்ள தரைக்கடை வியாபாரிகளுக்கு முறையாக அடையாள அட்டை வழங்கப்படவில்லை.

அதிகபட்சமாக 2000 பேர் மட்டுமே தரைக்கடை வியாபாரிகளாக இருக்கும் நிலையில் பட்டியலில் 6 ஆயிரம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கணக்கெடுப்பில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. எனவே தற்பொழுது வியாபார குழு தேர்தலை நடத்தக் கூடாது,

அதனை நிறுத்திவிட்டு முறையாக கணக்கெடுப்பு எடுத்து பட்டியலில் சரியான தரைக்கடை வியாபாரிகளை சேர்த்த பின்னர் தான் தேர்தலை நடத்த வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின்னர் மாநகராட்சி அலுவலகத்தை தரைக்கடை வியாபாரிகள் முற்றுகையிட்டு மாநகராட்சி ஆணையர் சரவணனை சந்தித்து இதே கோரிக்கை வலியுறுத்தி மனு அளித்தனர்.

திருச்சி என் எஸ் பி ரோடு, நந்திகோயில் தெரு, பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி பகுதியில் உள்ள தரைக்கடை வியாபாரிகள் கடைஅடைப்பு செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். 

பேட்டி:  அசரப்அலி, பொதுச்செயலாளர்,  மனிதநேய அனைத்து வர்த்தக நலச்சங்கம்

 

VIDEOS

Recommended