ஒரு கிலோ மீட்டர் தூரம் அரசுப் பேருந்தை நீட்டித்து இயக்கினால் 8 கிராம மக்கள் பயன் பெறுவார்கள்.

கார்மேகம்

UPDATED: Oct 6, 2024, 8:12:09 AM

ராமநாதபுரம் மாவட்டம்

மானாமதுரையில் இருந்து ஆர்.எஸ். மங்களம் செல்லும் அரசு பஸ்சை மேல நெட்டூர் வழியாக இயக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மானாமதுரை அருகே உள்ள மேல் நெட்டூர் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியைச் சுற்றி 8 கிராமங்கள் கோவில்கள் வங்கிகள் உள்ளன

பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அதிகளவில் இந்த கிராம பகுதிகளில் இருந்து படித்து வருகின்றனர்.

அரசு பேருந்து

சில மாதங்களுக்கு முன்னர் மானாமதுரையில் இருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு புதிதாக பஸ் இயக்கப்பட்டது அந்த பஸ் ஆலம்பச்சேரி விலக்கு வழியாக ஆர்.எஸ்.மங்கலத்திற்கு சென்று வருகிறது 

இந்த விலக்கில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலநெட்டூர் கிராமத்துக்கு பஸ் வராமல் செல்கிறது

இது குறித்து பொதுமக்கள் சார்பில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது

மேலும் கிராமத்தினர் மேலநெட்டூர் கிராமத்திற்கு பஸ் வந்தால் 8 கிராம மக்கள் பயன் பெறுவார்கள் எனவும் தெரிவித்தனர் 

ஆதலால் அரசுப் பேருந்தை கிராமப் புறங்கள் வழியே இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Online News In Tamil

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சங்கீத ராஜ் குமார் கூறுகையில் ஆலம்பச்சேரி விலக்கு வழியாக வரும் இந்த பஸ் 1- கீ.மீ. தொலைவில் உள்ள மேலநெட்டூர் கிராமத்திற்கு வந்து சென்றால் அக் கிராம பகுதியைச் சுற்றி இருக்கும் 8 கிராம மக்கள் பயன் பெறுவார்கள்

மேலும் பள்ளி மாணவர்கள் வேலைக்கு செல்வோர் மிகவும் பயனடைவார்கள் அதே போல ஆர்.எஸ். மங்களத்தில் இருந்து மதுரை செல்லும் போது இந்த கிராம பகுதிகளில் இருந்து மதுரை செல்வோர் பயனடைவார்கள்

எனவே போக்குவரத்து அதிகாரிகள் பொதுமக்கள் நலனை கருதி பஸ் கிராமத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

VIDEOS

Recommended