வைகை அணையில் இருந்து வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறப்பு

ராஜா

UPDATED: May 22, 2024, 1:46:19 PM

ராமநாதபுரம் சிவகங்கை மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள கண்மாய்களில் தண்ணீரை பெருக்கும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க இந்த மாத தொடக்கத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

அந்த ஆணையில் மதுரை சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 3 கட்டங்களாக 15 நாட்களில் மொத்தமாக 1,500 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கும்படி கூறப்பட்டு இருந்தது.  

அதன்படி முதல் கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்காக கடந்த நான்கு நாட்களில் 915 மில்லியன் கன அடி தண்ணீரும், இரண்டாம் கட்டமாக சிவகங்கை மாவட்டத்திற்கு 5 நாட்களில் 376 மில்லியன் கன அடியும் திறக்கப்பட்டது. 

இந்த நிலையில் மதுரை மாவட்ட தண்ணீர் தேவைக்காக 209 மில்லியன் கன அடி தண்ணீரை இன்று முதல் 27ந்தேதி வரையிலான 6 நாட்களில் வழங்க முடிவு செய்யப்பட்டு, இன்று காலை 6 மணி முதல் வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. 

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 48 அடியாக சரிந்துள்ளது. கடந்த 10 நாட்களில் வைகை அணையின் நீர்மட்டம் 10 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பருவ மழை பெய்வதை பொறுத்து வைகை அணையில் இருந்து ஜூன் மாதம் மதுரை மாவட்ட முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

  • 1

VIDEOS

Recommended