இந்தியன் வங்கி கிளைகளில் போலி தங்க நகைகளை அடைமானம் வைத்து 2.53கோடி ரூபாய் மோசடி.

லக்ஷ்மி காந்த்

UPDATED: Apr 9, 2024, 8:33:18 PM

காஞ்சிபுரம் இந்தியன் வங்கிகளில் கடந்த ஆண்டு அடமானம் நகைகள் சம்பந்தமான ஆய்வு நடந்த போது நகைகளின் எடை,தரம் ஆகியவை குறித்து வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

இதனையெடுத்து காஞ்சிபுரம் காரப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி,கம்மவார் பாளையம் இந்தியன் வங்கி மற்றும் சங்கரமடம் அருகில் உள்ள இந்தியன் வங்கி ஆகிய மூன்று வங்கி கிளைகளிலும் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை சமீபத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது 2023 மே முதல் டிசம்பர் வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த மூன்று வங்கி கிளைகளிலும் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் தங்கம் எல்லாம் பூசி அடமானம் வைக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்தது.

இதனையெடுத்து போலி நகைகளை மோசடி செய்து அடமானம் வைத்தவர்களின் விபரங்களை தயார் செய்து இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ராஜாராமன் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரடம் புகார் அளித்திருந்தார்.

அவரது புகாரையெடுத்து போலி நகைகளை அடமானம் வைத்தவர்களை பிடித்து விசாரித்தனர்.அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மோசடி செய்வதற்காகவே கவரிங் நகைகளுக்கு தங்கம் மூலம் பூசி நகைகளை தயார் செய்தது தெரிய வந்தது.

மேலும் தனக்குத் தெரிந்த நண்பர்கள்,உறவினர்கள் பலரின் வங்கி கணக்கு வாயிலாக நகை அடமானம் வைத்து விசாரணையில் தெரியவந்தது. 

காரப்பேட்டை வங்கி கிளையில் 1 கோடியே 51 லட்சத்து 71 ஆயிரம் ரூபாயும்,சங்கரமட வங்கிக் கிளையில் 66 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும்,கம்மவார் பாளையம் இந்தியன் வங்கிக் கிளையில் 35 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 2 கோடியே 53 லட்சம் மோசடியாக போலி தங்க நகைகள் அடகு வைத்து பெற்றுள்ளது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராணிப்பேட்டை மாவட்டம் உளியநல்லூரை சேர்ந்த மேகநாதன்(வயது 35) , நெமிலி தாலுகா பனப்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ்(வயது38) , காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியை சேர்ந்த சுரேந்தர் குமார்(வயது 38) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

மேலும் மோசடியில் தொடர்புடைய பள்ளுரை சேர்ந்த ராஜேஷ்,சென்னையை சேர்ந்த சரவணன் மற்றும் மேலும் இதில் தொடர்புடைய சிலரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

VIDEOS

Recommended