வேளாங்கண்ணியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு.

செ.சீனிவாசன் 

UPDATED: Aug 11, 2024, 5:27:25 PM

நாகப்பட்டினம் மாவட்டம்

வேளாங்கண்ணியில் தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது அதில் பங்கு பெறுவதற்காக திண்டுக்கல்லில் இருந்து 45 மாணவ, மாணவியர் வந்துள்ளனர்,

இந்த நிலையில் மதியம் போட்டியை முடித்துவிட்டு 13 மாணவர்கள் வேளாங்கண்ணி சுற்றுலா தளத்தை சுற்றி பார்ப்பதற்காக சென்ற நிலையில் மாணவர்கள் கடலில் குளித்து உள்ளனர்.

அப்போது 3 மாணவர்கள் கடல் அலையில் அடித்து செல்லவே சக மாணவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.

வேளாங்கண்ணி

இந்த நிலையில் பேரூராட்சி கடல் மீட்பு குழுவினர் மற்றும் இளைஞர்கள் கடல் அலையில் சிக்கிய ஒரு சிறுவனை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் 

மேலும் இரண்டு மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டபோது திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார் பட்டி விவேகானந்தா மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் ஆறாம் வகுப்பு மாணவர் இறந்த நிலையில் கரை ஒதுங்கினார்.

மேலும் காணாமல் போன ஒரு மாணவனை தேடும்பனியில் ஈடுபட்டிருந்தபோது கன்னிக்கோவில் அருகே 13 வயதான வீரமலை என்ற மாணவன் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளான் இருவர் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Latest Nagai District News 

இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை அருகே சிலம்பப் போட்டியில் பங்கேற்க வருகை தந்த மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

 

VIDEOS

Recommended