குன்னூரில் பிரபல தனியார் ஓட்டலில் தக்காளி சாஸ் ல் நெளிந்த புழுக்கள் கொந்தளித்த துணை நடிகர் விஜய் விஸ்வா.
அச்சுதன்
UPDATED: Apr 28, 2024, 8:21:50 PM
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிகில், மாயநதி, சாயம், உட்பட பல்வேறு படங்களில் நடித்த துணை நடிகர் விஜய் விஸ்வா என்ற அபி சரவணன், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளார்.
இவர்கள் குன்னூரில் டேன்டீ தலைமை அலுவலகம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளனர்.
அப்போது ஃப்ரைடு ரைஸ் ஆர்டர் செய்து உணவு அருந்தியுள்ளனர்,அதனுடன் தக்காளி சாஸ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனை அனைவரும் ஒன்று கொண்டிருந்தபோது ஒருவருக்கு சாஸ்சில் துர்நாற்றம் வீசுவது போல் உள்ளது என அந்த சாஸ் இருந்த குடுவையை திறந்து பார்த்துள்ளார்,அதிஷ் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஹோட்டல் நிர்வாகத்திடம் விபரம் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர்கள் அதற்கான உரிய பதில்களை அளிக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட நபர்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு போன் செய்த போதும் யாரும் எடுக்காத நிலையில்,108 ஆம்புலன்ஸ் க்கும் போன் செய்தும், போலீஸ்க்கும் தகவல் கொடுத்தனர்.
தொடர்ந்து ஓட்டல் நிர்வாகத்தினர் அங்கு வந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்ட பின் அவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து துணை நடிகர் விஜய் விஸ்வா கூறுகையில், "" இந்த ஹோட்டலில் தங்குவதற்காக கேட்டபோது ஒரு நாளைக்கு ஒரு லட்சத்தி 85 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக தெரிவித்தனர்.
இங்கு தங்க வேண்டாம் என முடிவு செய்து உணவு அருந்த முடிவு செய்தோம்.
ப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்தபோது அதில் வைக்கப்பட்ட சாஸில் ஒரு வித துர்நாற்றம் வீசியது.அதைத் திறந்து பார்த்தபோது அதில் புழுக்கள் இருந்தது.
இதனால் நாங்கள் உண்பதை உடனடியாக நிறுத்திவிட்டு அங்கு பணியாற்றிய ஊழியர்களிடம் கேட்டபோது சரியான உரிய பதில் அளிக்கவில்லை. ஸ்டார் ஹோட்டல் எனவும் அனைவரும் இங்கு வருகிறார்கள் எனவும் தெரிவித்தனர்.
இதில் இருவருக்கு வாந்தி ஏற்பட்டதாகவும் உடனே சம்பந்தப்பட்ட துறைக்கு இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க முயன்றோம். ஆனால் தொடர்பு எண் பயனில்லை என ஆங்கிலத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஒரு மணி நேரமாக காத்திருந்தும் தண்ணீர் கூட கொடுக்கவில்லை. இறுதிவரை நுழைவாயில் அருகே நிற்க வைத்து விட்டனர்.
இந்த உயர் தர ஓட்டலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்து செல்கின்றனர்.
இதுபோன்ற சாஸ் பாக்கெட்டுகளை சோதித்த பின்பு உட்கொள்ள வேண்டும் என்றார்.
இதுகுறித்து ஓட்டல் மேலாளர் டொமினிக் சேவியர் கூறுகையில் :
இன்று எங்கள் ஓட்டலுக்கு விருந்தினர்கள் வந்திருந்தனர். ப்ரைட் ரைஸ் டொமேட்டோ சாஸ் சில் புழு இருப்பதாக தெரிவித்தனர்.
அது எங்களுடைய உற்பத்தி கிடையாது மார்க்கெட்டிலிருந்து வாங்குகிறோம். வாடிக்கையாளர்களிடம் ஓட்டல் தரப்பில் மன்னிப்பை கேட்டோம். " என்றார்.
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 29-04-2024
மேலும் இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இச்சம்பவம் தொடர்பாக குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பி உள்ளனர் சம்மந்தப்பட்ட தனியார் ஓட்டலில் ஆய்வு மேற்க் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.