• முகப்பு
  • குற்றம்
  • மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வாயிலில் நிறுத்தும் இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வாயிலில் நிறுத்தும் இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

செந்தில் முருகன்

UPDATED: Apr 14, 2024, 1:14:00 PM

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் அரசு பெரியார் மருத்துவமனை உள்ளது. மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

மருத்துவமனைக்கு தினந்தோறும் 3,000-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாக 700க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

மருத்துவமனைக்கு உள்ளே இருசக்கர வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாததால் மருத்துவமனை சாலையில் இருபுறமும் இருசக்கர வாகனங்களை பொதுமக்கள் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

அவசர கதியில் இருசக்கர வாகனத்தை பூட்டாமல் மருத்துவமனைக்கு செல்லும் பல்வேறு நபர்களின் இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

தரங்கம்பாடி தாலுக்கா வளத்தாம்பட்டினத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த வாரம் அரசு மருத்துவமனை வாயில் அருகே சாலை ஓரத்தில் தனது இரு சக்கர வாகனத்தை பூட்டாமல் நிறுத்தி விட்டு உடல் நிலை சரியில்லாத தனது உறவினரை பார்க்க சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் வெளியே வந்து பார்த்தபோது தனது பிளாட்டினா இருசக்கர வாகனத்தை காணவில்லை. இது குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து தனது வாகனத்தை தேடியபோது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் ஒருவர் தனது வாகனத்தை தள்ளி செல்வதை பார்த்து உள்ளார்.

தொடர்ந்து அன்’று இரவே அதே நபர் மற்றொரு இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்றதை பார்த்து அவரை விரட்டி சென்றுள்ளார். அந்த மர்ம நபர் இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பி ஓடி உள்ளார்.

இதுபோல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையில் நிறுத்தும் வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாகவும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended