பாஸ்ட் ட்ராக் காரில் 195 கிலோ குட்கா கடத்தல்.

சுரேஷ் பாபு

UPDATED: Sep 17, 2024, 12:55:22 PM

திருவள்ளூர்

ஆந்திராவில் இருந்து நூதன முறையில் பாஸ்ட் ட்ராக் காரில் 195 கிலோ குட்கா கடத்தி வந்த மூவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து குட்கா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது.

குட்கா கடத்தல்

நேற்றைய தினம் ஆந்திராவில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் தாலுகா போலீசருக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.

அதைத் தொடர்ந்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் திருவள்ளுர் அடுத்த பட்டறை பெருமந்தூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.

Latest Crime News Today

அப்போது தமிழக என் கொண்ட பாஸ்ட் ட்ராக் காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் அத்தகைய காரில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்ததை கண்டறிந்தனர்

அதைத்தொடர்ந்து அவர்களை காருடன் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

Thiruvallur News Today

விசாரணையில் திருவள்ளூர் அடுத்த உளுந்தை முதுகூர் பகுதியைச் சேர்ந்த  ராமச்சந்திரன் -52 இன்பராஜ்-25 திரவியக்குமார் -38 என்பது தெரிய வந்தது.

அவர்கள் கடத்தி வந்த பாஸ்ட் ட்ராக் வாகனத்தையும் 195 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து

மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் 

District News & Updates in Tamil 

வாடிக்கையாளர்களை ஏற்றி வருவது போல் பாஸ்ட்ராக் கார் மூலமாக குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended