• முகப்பு
  • சென்னை
  • பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வளசரவாக்கம் மண்டலத்தில் ஆலோசனை கூட்டம்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வளசரவாக்கம் மண்டலத்தில் ஆலோசனை கூட்டம்.

ஆனந்த்

UPDATED: Sep 25, 2024, 5:42:13 AM

சென்னை

காரம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் 11 ல் உள்ள அனைத்து தரப்பு அரசு துறை சார்ந்த அதிகாரிகள்,கவுன்சிலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மண்டல குழு தலைவர் ராஜன் மற்றும் துறை ரீதியான அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் போது ஒவ்வொரு துறையை சேர்ந்த அதிகாரிகளும் தங்கள் துறைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் துறை ரீதியான குறைகளை கூறினார். அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டலக்குழு தலைவர் ராஜன் பதில் அளித்தார்.

பருவமழை

அத்துடன் பருவமழையின் போது எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து எம்எல்ஏ கணபதி அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். 

குறிப்பாக பேரிடர் மீட்பு துறையினர் படகுகள் மற்றும் மீட்பு குழுவினரை தயார் நிலையில் வைத்திருக்கும் படி அறிவுறுத்தினார்.

குறிப்பாக இதில் பேசிய எம்எல்ஏ வளசரவாக்கம் மண்டலம் சார்பில் 88 நீர் மோட்டர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் 48 மோட்டார்கள் வாங்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.

அதிகாரிகளுக்கு என்ன உபகரணங்கள் தேவை என என்னிடம் கூறினால் அதற்கு மேல் இடத்தில் சொல்லி அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருவேன் எனவும் மழைக்காலங்களில் மக்கள் அவதி படாத வகையில் அனைவரும் பொறுப்புடன் வேலை செய்ய வேண்டும் எனவும் பேசினார் .

அவரை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அயப்பாக்கம் உராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி ; திமுக என்றாலே மின் வெட்டு என மக்கள் நினைப்பதை மாற்ற வேண்டும் ,அதே போல் போன் ரிசிவரை கீழே எடுத்து வைப்பது ,போன் எடுக்காமல் கால தாமதம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடாமல் மின்சார துறை துரீதமாக செயல்பட வேண்டும் என வேண்டு கோள் விடுத்தார்.

மேலும் மின்துறை அதிகாரிகள் மழைக்காலங்களில் மின்தடை ஏற்படாதவாறு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மின்விபத்துகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து முடிக்கவும் ஆலோசனைகள் வழங்கினார்.

இதில் கவுன்சிலர்கள் ஹேமலதா கணபதி,ரமணி மாதவன் , வி.வி.கிரிதரன்,சாந்தி ராமலிங்கம்,பாரதி ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல் மின்சாரம், காவல்துறை தீயணைப்பு துறை ,வருவாய் துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended